ஆற்றோரம் மண்ணெடுத்து நூல் ஆசிரியர் வழக்கறிஞர் .கவிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
ஆற்றோரம் மண்ணெடுத்து
நூல் ஆசிரியர் வழக்கறிஞர் .கவிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 70
அட்டைப்பட வடிவைமைப்பு அருமை .தமிழே !உன்னை ஆராதிக்கிறேன் .என்ற குதல் கவிதையிலேயே நூல் ஆசிரியர் கவிஞர்
சி .அன்னக்கொடி தனி முத்திரைப் பதித்து உள்ளார் .தமிழை தாயாக ,தந்தையாக ,நண்பனாக பார்க்கும் பார்வை வித்தியாசமானது. பாராட்டுக்கள்.
தமிழன் தமிழனாக இரு ! கவிதையில் தமிழர் திருநாளான தைத்திங்கள் ஒரு நாளிலாவது தமிழன் தமிழனாக இரு ! என்று வேண்டுகோள் வைக்கின்றார் .ஆற்றோரம் மண்ணெடுத்து நூலின் தலைப்பிற்கான கவிதை மிக நன்று .
ஆத்துத் தண்ணியில்
ஓரத்து மண்ணெடுத்து
அயிரை மீன் பிடிச்சது
ஞாபகமிருக்கு !
ஞாபகமிருக்கு ! ஞாபகமிருக்கு ! என்று எழுதி மலரும் பசுமையான நினைவுகளை கவிதையாக்கி படுக்கும் வாசகர்களுக்கும் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றிப் பெறுகின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி .இளைஞனே ! என்ற கவிதையில் தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .
சாமிக்கு இடம் தேடி !
புல்லாங்குழல் கிடைத்திருக்கிறது
அடுப்பெரிக்க பயன்படுத்துகிறோம் !
ராமர் சாமிக்கு
இடம் தேடிக் கொண்டிருக்கின்றோம்!
மூடநம்பிக்கைகளை பல கவிதைகளில் சாடி உள்ளார் .
இந்தியாவின் விடுதலைக்கு -- மகாத்மா
தமிழரின் விடுதலைக்கு -- பெரியார்
இந்த இரண்டு வரிகள் போதும் நூலின் சிறப்பைப் பறை சாற்றிட !
ஆதிக்க சக்திகளுக்கு ஆரத்தி எடுத்தபொழுது
தீப்பந்தம் கொண்டுவந்தவன் நீ !
என்று தந்தை பெரியாரைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தம் .
தத்துவம் சொல்லும் கவிதைகள் நூலில் உள்ளது .தத்துவத்தை கணிதத்தின் மூலம் உணர்த்துகின்றார் .
வெறுமை !
மனித வாழ்க்கை
கூட்டிப் பார்த்தேன்
கழித்துப் பார்த்தேன்
பெருக்கிப் பார்த்தேன்
வகுத்துப் பார்த்தேன்
கிடைத்தது ஒன்றே ஒன்றுதான்
அதுதான் ஒன்றுமில்லை !
மிகப் பெரிய தத்துவத்தை மிக எளிமையாகப் பதிவு செய்துள்ளார் .
புகைப்படங்களுக்குப் பொருத்தமாக பல கவிதைகள் உள்ளது .சிந்திக்க வைக்கின்றன .வனத்துறையின் ,காவல்துறையின் பாரபட்சத்தை உணர்த்தும் கவிதை .
சந்தனக் கட்டை வண்டிக்கு
சலாம் போட்ட கைகள்
சுள்ளி விறகு பொறுக்கிய
கரங்களுக்கு காப்பு மாட்டியது !
வித்தியாசமாக சிந்திக்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி.
காதல் வாகனம் !
எங்கள் காதலுக்கு
மத்தியும் --- மாநிலமும்
உதவிக்கு வந்தன
பேருந்தாய் ! இரயிலாய் !
நம் நாட்டில் கடவுள் பக்திக்கு பஞ்சம் இல்லை .கடவுளுக்குப் பணத்தை தண்ணியாகச் செலவழிப்பார்கள் ,ஆனால் பெத்த தாயை கவனிக்க மாட்டார்கள் .அதனை உனதும் கவிதை .
மறுசேலை !
அம்மனுக்கு தாயே என்று சொல்லி
பட்டுப்புடவை எடுத்து சாற்றினேன் !
அம்மாவுக்கு ஒரு சேலைக்கு
மறுசேலை இல்லாமல் இருப்பதை மறந்து விட்டேன் !
விவசாயிக்கு மட்டும்
வெல்லமும் கசக்கும்
விலைக் குறைவால் !
மிகச் சிறந்த ஹைக்கூ கவிதைகளும் நூலில் உள்ளது .பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி அவர்கள் தொடர்ந்து எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாயத்தில் விழிப்புணர்வை விதைக்க வேண்டும் .

கருத்துகள்
கருத்துரையிடுக