மது ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மது             ஹைக்கூ             கவிஞர் இரா .இரவி

அதனை நீ குடிக்க
அது உன் உயிர் குடிக்கும்
மது !

இலவசமென்றாலும் வேண்டாம்
உனைக் கொல்லும் நஞ்சு
மது !

என்றைக்காவது என்றுத் தொடங்கி
என்றும் வேண்டும் என்றாகும்
மது !

நண்பனுக்காகக் குடிக்காதே
நண்பனைத் திருத்திடு
மது !

சிந்தனையைச் சிதைக்கும்
செயலினைத் தடுக்கும்
மது !

மதித்திட வாழ்ந்திடு
அவ
மதித்திட வாழாதே
மது !

இன்பத்தைக் கொண்டாட
துன்பம் எதற்கடா
மது !

சோகத்தை மறந்திட
மருந்தன்று
மது !

நன்மை ஏதுமில்லை
தீமை ஏராளம்
மது !

இழப்பு பணம் மட்டுமல்ல
மானமும்தான்
மது !

இல்லத்தரசிகளின்
முதல் எதிரி
மது  !

திறமைகளை மறக்கடிக்கும்
ஆற்றலை அழித்துவிடும்
மது !

உடலுக்கு
க் கேடு மட்டுமல்ல
ஒழுக்கக் கேடு
மது !

வீழ்ந்தவர்கள் கோடி
வீழ்வது தெருக்கோடி
மது !

அடிமை ஆக்கும்
அடி மடியில் கை வைக்கும்
மது !

மனிதனை மிருகமாக்கும்
பகுத்தறிவை மழுங்கடிக்கும்
மது !

குற்றவாளியாக்கும்
கொலைகாரனாக்கும்
மது !

நிதானம் இழந்து
நிலத்தில் வீழ்த்தும்
மது !


வாய் மட்டுமல்ல
வாழ்க்கையும் நாறும்
மது !

உழைத்த
ப்  பணத்தை 
தாரியாக்கும்
மது !

குடி குடியை மட்டுமல்ல
சமுதாயத்தையும் கெடுக்கும்
மது !
கேடியாக மாறுவாய்
ஜோடிஇன்றி வாடுவாய்
மது   !

தொடவே தொடதே
தொட்டால் பற்றிக்கொள்ளும்
மது   !

மட்டமாக்கும் உன்னை
மடையனாக்கும் உன்னை
மது  !

கேளீக்கை என்று தொடங்கி
வாடிக்கையாகிவிடும்
மது  !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!

கருத்துகள்