ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ             கவிஞர் இரா .இரவி

இழுக்க
இழுக்க இன்பமன்று
இழுக்க இழுக்கத் துன்பம்
சிகரெட் !

புண்பட்ட மனதை
ப் புகை விட்டு
புண்ணாக்காதே
மேலும்
சிகரெட் !

விரைவில் சாம்பலாவாய்
உணர்த்தும் சாம்பல்
சிகரெட் !

புகையில் வளையம்
உனக்கான மலர்
வளையம்
சிகரெட் !

நடிகரைப் பார்த்து
ப் புகைக்காதே
உன்னை நீயே புதைக்காதே
சிகரெட் !

உனக்கு மட்டுமல்ல
சுற்றி இருப்பவருக்கும் நோய்
சிகரெட் !

வெள்ளையன் கற்பித்த
வெள்ளை உயிர்க்கொல்லி
சிகரெட் !

எந்தப் பெண்ணும்
என்றும் விரும்பவில்லை 
சிகரெட் !

தூக்கம் வர விழிக்க
தயாரிக்க
வில்லை  
சிகரெட் !

ஆதியில் இல்லை
பாதியில் வந்த தொல்லை
சிகரெட் !

தீங்குத் தரும் கங்கு
தீண்டாது ஒதுங்கு
சிகரெட் !

உடல் நலத்திற்குக் கேடு
உடனே சிந்தித்து விட்டுவிடு
சிகரெட் !

முயன்றால் முடியும்
முடிவெடு வேண்டாம் என்று
சிகரெட் !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்

 1. ஐயா வணக்கம் ஐக்கூ புத்தகத்திற்கு விருது வழங்கும் இலக்கிய அமைப்புகளையும் போட்டிக்கு புத்தகத்தினை அனுப்புவது, போட்டி நடத்தும் நாள் பற்றியும் எப்படி அறிவது ...எனக்கு கூறி உதவுங்கள் ஐயா. நன்றி
  manisen37@yahoo.com

  பதிலளிநீக்கு
 2. கவிஞர் கன்னிக்கோவில் ராஜா செல் எண் தொடர்பு கொண்டு பேசுங்கள் 9841236965

  பதிலளிநீக்கு
 3. சிந்திக்கவைத்த, சிகரமான விசயம்.
  - Killergee

  பதிலளிநீக்கு
 4. நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக