காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை

காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை !             கவிஞர் இரா .இரவி மதுரை

உலகின் முதல் மனிதன் தமிழன்
உலகின் முதல் மொழி தமிழ்

உலகின் முதல்  ஊர் மதுரை
உலகப் புகழ்  மகாத்மா ஆக்கிய மதுரை !

மதுரைக்கு வந்த
காந்தியடிகளின் மனம்
ஏழைகளின் இன்னல் கண்டு இரங்கியது

ஆடைக்கு வழியின்றி வாடும் ஏழைகள் இருக்க
ஆடம்பர ஆடைகள் எனக்கு இனி எதற்கு ?

விலை உயர்ந்த ஆடைகளைக் களைந்து
கதராலான அறையாடைக்கு மாறினார்

காந்தியடிகளுக்கு மனமாற்றத்தை விதைத்தது மதுரை
எல்லோருக்கும்   எல்லாமும் கிடைக்கும் வரை

என்னுடைய  ஆடை இதுதான் என்றார்
எவ்வளவோ பலர் சொல்லியும் ஏற்க  மறுத்தார்

எடுத்த முடிவில் இறுதிவரை தீர்க்கமாக இருந்தார்
எங்கு சென்றபோதும் அரை ஆடையிலேயே சென்றார்
என்னைப் பற்றி எவர் என்ன ? நினைத்தாலும்
எனக்கு கவலை என்றும் இல்லை என்றார்


பொதுஉடைமை சிந்தனையை ஆடையால் விதைத்து
பூமிக்கு புரிய வைத்த புனிதர் காந்தியடிகள்

ஏழைகளின் துன்பம் கண்டு 
காந்தியடிகளின்
இரக்கத்தின் வெளிப்பாடே அரையாடை

மன்னரைப் பார்க்கச் சென்றபோதும்
கூ
மதுரை அரையாடையிலேயே சென்றார்

கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்
கண்டவர்  பேச்சுக்கு செவி மடுக்காமல் இருந்தார்

அரையாடை அணிந்த பக்கிரி என்று சிலர்
அறியாமல் பேசியதையும் பொருட்படுத்தாதிருந்தார்

குழந்தை ஒன்று தாத்தா சட்டை தரட்டுமா ? என்றது
கோடிச் சட்டைகள் தர முடியுமா ? உன்னால் என்றார்

இந்தியாவின் ஏழ்மையை மறந்துவிட்ட சுயநல
அரசியல்வாதிகளுக்கு ஏழ்மையை உணர்த்திட்டார்

ஏழ்மையின் குறியீடாக
த் திகழ்ந்தார் காந்தியடிகள்
வறுமையின் ப்டிமமாகத்
திகழ்ந்தார் காந்தியடிகள்

கதராடை  அரையாடை ஆடை மட்டுமல்ல
சமத்துவ சமதர்ம சமுதாயத்தின் விதை அவை
உலகளாவிய அஞ்சல் தலைகளிலும் சிலைகளிலும்
உன்னத அரையாடைக் கோலத்திலேயே உள்ளார் 


உலகம் உள்ளவரை ஒப்பற்ற மதுரை இருக்கும்
மதுரை
உள்ளவரை மகாத்மா புகழ் நிலைக்கும் 
  


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்