ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                 கவிஞர் இரா .இரவி

ஏட்டில் எழுத்தில் சரி
வீட்டில் நடைமுறையில் எப்போது ?
பெண் விடுதலை !

விபத்து
விழிப்புணர்வு விதைத்தது
குருதிக் கொடை !

கட்டைவிரல் கேட்ட
நாக்கை வெட்டினான்
இன்றைய ஏகலைவன் !

கைகளை விட
உயர்ந்தது
தன்னம்பிக்கை !
 

இன்றைய  அமைச்சர்
நாளைய கைதி
நாட்டு நடப்பு !

பாசப் போராட்டம்
அழாத தந்தை அழுதார்
மகளுக்குத் திருமணம் !

பசி எடுக்க
மருந்துக் கேட்டார்
பணக்காரர் !

தூக்கம் வர
மாத்திரைக் கேட்டார் 
பணக்காரர் !

உச்சரிப்புத்  தவறினாலும்
கேட்க இனிமை
மழலை !

மக்கள் விருப்பம்
அனைத்து தொகுதியிலும்
இடைத் தேர்தல் !      

விதைப்புமின்றி
அறுவடையுமின்றி
விலை நிலங்கள்    !

உள்ளே சென்றனர்
மூக்கைப் பிடித்து
நவீன கழிப்பறை ?

குசியில் குடிமகன்கள்
கூடுதல் நேரம்
மதுக்கடை !

யாரும் விற்கவில்லை
தரமான
தங்கம் !

விளம்பர  விரயம்
சேர்ந்துக் கொண்டது
பொருளின் விலையில் !

கருத்துகள்