நீர்த்தடம்
நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 50 தகிதா பதிப்பகம் கோவை
ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கி வரும் சிறந்த படைப்பாளி நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன் .முதல் முகவரி ,விழித்திருக்கிறது பசி என்ற இரண்டு ஹைக்கூ நூல்களின் மூலம் பரவலாகப் பாராட்டப் பட்ட கவிஞரின் மூன்றாவது ஹைக்கூ நூல் இந்த நீர்த்தடம். நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .கோவை வசந்த வாசல் கவி மன்றம் மூலம் கவிதைத் தொகுப்பு நூலை வருட வருடம் வெற்றிகரமாக வெளியிட்டு வரும் கோவை கோகுலன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக உள்ளது . ஹைக்கூ கவிஞர்களின் பெயர்களை மறக்காமல் குறிப்பட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார் .
காணிக்கை !
உயிர் தந்த அன்னைக்கும் ,உடல் தந்த தந்தைக்கும் ,
தமிழ் தந்த தமிழாசான் சி .கமாலுதீன் அய்யா அவர்கட்கும் ..
நூலை காணிக்கையாக்கியதில் வித்தியாசப் படுகின்றார் .
முதல் ஹைக்கூவில் தனி முத்திரைப் பதித்து உள்ளார் .
குழி விழுந்த சாலைகள்
குறிப்பால் உணர்த்தின
ஒப்ந்தக்காரர் ஊழல் !
பெண் குழந்தைப் பெற்றவர்களின் மன நிலையை நன்கு ஹைகூவால் படம் பிடித்துக் காட்டுகின்றார் .
வீட்டில் சுற்றிய மகள்
வேறொருவர் கரங்களில்
அறும் பாசவலை !
இன்றைய ஏமாற்று அரசியலைத் தோலுரித்துக் காட்டும் விதமான ஹைக்கூ .
திடீர் மார்பு வலி
மறியலில் கைதான
முன்னாள் அமைச்சருக்கு !
தோல்விக்கு ,துன்பத்திற்கு வருந்தாமல் கவலை கொள்ளாமல் தொடர்ந்து முயன்றால் வெற்றி, இன்பம் உறுதியாகக் கிட்டும் என்பதை குறியீடாக உணர்த்தும் ஹைக்கூ .
உளி வலி வாங்கியும்
புன்னகைக்கிறது
கோவில் சிற்பம் !
வறுமை கொடுமை என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .
ஒட்டிய வயிறு
எளிதாய் நுழையும் வளையம்
கழைக் கூத்தாடி !
மோசடிப் பேர்வழிகள் சாமியார்கள் என்ற பெயரில் ஏமாற்றுவதும் மக்கள் தெரிந்தே ஏமாறுவதும் வாடிக்கை .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ .
ஆன்மீகப் போர்வையில் தேடல்
அகப்பட்டுக் கொண்டதும்
ஓடல் !
உணவு ,பழக்கம் ,வழக்கம் ,தட்ப வெப்பம் காரணமாக வயதானதும் நோய்கள் தொற்றி விடுகின்றது .
உருண்டை மாத்திரைகளில்
உருளுகிறது
முதுமை வண்டி !
இயந்திரமயம் என்ற பெயரில் மக்கள் சக்தி புறக்கணிக்கப்பட்டு பசியும் ,வறுமையும் பரிசளித்து வரும் உலகமயத்தை சாடும் விதமாக ஒரு ஹைக்கூ .
இயந்திரக் கலப்பை
ஆழ உழுதது
கூலியாள் பசி !
காட்சிப் படுத்தும் ஹைக்கூ இதோ !
வீடு சுத்தமானது
வீட்டை இழந்தது
வலைச் சிலந்தி !
ஊழலை ஒழிப்போம் ! ஊழலை ஒழிப்போம் ! என்று சொல்லிக் கொண்டே ஊழலில் சாதனைப் படைத்தது வரும் அரசியல்வாதிகளின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு ஹைக்கூ .
தங்கம் வென்றார்கள் அரசியல்வாதிகள்
காமன் வெல்த்
விளையாட்டு ஊழலில் !
சிந்திக்க வைக்கும் ஹைக்கூ தொகுப்பு நூல் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள் .சிறிய வேண்டுகோள் ஹைக்கூ என்பது மூன்று வரிகளில் மட்டுமே இருக்க வேண்டும் .அடுத்த பதிப்பில் இரண்டு வரிகளில் உள்ள ஒரு கவிதை, நான்கு வரிகளில் உள்ள சில கவிதைகளை மூன்று வரிகளாக்கி வெளியிடுங்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
http://en.netlog.com/ rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

http://eluthu.com/user/index.
http://en.netlog.com/
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக