கவிஞர் அ.பரந்தாமன் அவர்களின் 70 வது பிறந்த நாள் விழா

கவிஞர் அ.பரந்தாமன் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, திரு .அ.பரந்தாமன்,திருமதி ப .லட்சுமி தம்பதியரின் திருமண நாள் விழா மதுரை தல்லாகுளம் பூதகுடி திருமண மண்டபத்தில் நடைபெற்றது .விழாவிற்கு பாரதி இலக்கியப் பேரவையின் தலைவர் க .ஜான் மோசஸ் தலைமை வகித்தார் . தலைமையுரையில் மிகச் சிறப்பான கவிதைகளை எழுதிய நூல் ஆசிரியர் திரு .அ.பரந்தாமன் அவர்களுக்கும் , நூலினை மிகச் சிறப்பாக அச்சிட்ட அரிமா முத்து  அவர்களையும் பாராட்டினார் . திரு .அ.பரந்தாமன் பல வருடங்களுக்கு முன் எழுதிய கவிதைகளை, கோழிப் போல அடைக்காத்து தன்னுடைய முதல் கவிதை நூலான குடத்து விளக்கு  என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். நூலிற்கு அணிந்துரை வழங்கிய கவிஞர் இரா .இரவி அவர்களையே  வெளியிடச் செய்து ,தனது சிறு வயது முதலான நண்பர் M.அந்தோனி அவர்களைப் பெற்றுக் கொள்ளச்  செய்தார்.நூல் ஆசிரியர்  திரு .அ.பரந்தாமன் ஏற்புரையில் தன்னுடைய நெடு நாள் கனவு நனவானதாகக் குறிப்பிட்டார் .மதுரை உயர்  நீதி மன்ற வழக்குரைஞர் இளங்கோவன் வரவேற்ப்புரையும் , தொகுப்புரையும் ஆற்றினார் .விழாவிற்கான ஏற்பாட்டை ,வைகை குயில் சுப்பிரமணியன் மற்றும் திரு .அ.பரந்தாமன் அவர்களின் புதல்வர்களும் ,குடும்பத்தினரும்    செய்து இருந்தனர் .திருமண நாள் விழாவிற்கு வந்து இருந்த அனைவருக்கும் குடத்து விளக்கு  நூல்  இலவசமாக வழங்கப் பட்டது .

http://www.eraeravi.com/home/detail.php?id=800&cat=nl

http://eraeravi.blogspot.in/2012/01/i.html

கருத்துகள்