முப்பொழுதும் உன் கற்பனைகள்
இயக்கம் எல்ரெட் குமார்
இசைG.V. பிரகாஷ் குமார் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அதர்வா முரளி கதாநாயகன் ,அமலாபால் கதாநாயகி .வழக்கமான மசாலாப் பாடல் ,அடி ,உதை ,சண்டை உள்ளது .கவிஞர் தாமரையின் பாடல்கள் நன்று. பின்னணி இசை நன்று .விதைவையான தாய் தன் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வளர்க்கிறாள். தன் மகனுக்கு நடக்க முடியவில்லை என்றதும் தூக்கியே சுமக்கிறாள் .அதிகப் பணம் சம்பாதித்து கேரளா வைத்தியம் பார்த்து மகனை நடக்க வைத்து படிக்க வைத்து அழகு பார்க்கிறாள் .மகன் வேலை தொடர்பாக சென்னை சென்றதும் பிரிவு தாங்க முடியாமல் நோயுற்று இறக்கிறாள்.
லட்சியத்தாய் மனதில் நிற்கிறாள் .தாய் இறந்த சோகத்தில் உடைந்து இருக்கும்தோழனுக்கு , தோழி வந்து மகனுக்கு அறிவுரை கூறி அழைத்து செல்கிறாள் .இருவரும் சேர்ந்து தயாரித்த கதிர்வீச்சு தடுப்பு திட்டத்திற்கு விருது கிடைக்கின்றது,பெரிய தொழில் அதிபர் தன் மகளை வேறு கணினி நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்து ,விருது கிடைத்ததும் கட்டாயப் படுத்தி அமெரிக்கா அழைத்து சென்று விடுகிறார் .ஏற்கனேவே அவளுடன் சண்டையிட்ட பெண் பித்தர்களான இருவர்தான் கடத்தி விட்டார்கள் என்று கருதி வில்லன்களை கொலை செய்கின்றார் .
தாயை இழந்தவர் ,காதலியையும் இழந்ததால் மன நோயாளியாகி விடுகிறார் .ஆனால் சென்னையில் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சனி ஞாயிறு மட்டும் பெங்களூர் சென்று காதலியுடன் வாழ்வது போல கற்பனையில் வாழ்ந்து வருகிறார் .அமெரிக்கா சென்ற தோழி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நண்பர்களை அழைக்க வருகிறார்.இவனுக்கு தோழியை அடையாளம் தெரியவில்லை .இவனுக்கு என்ன நேர்ந்தது விசாரிக்கிறாள்.மன நல மருத்துவர் சில காலம் அவனுடன் தோழியாக ,காதலியாக நடிக்க சொல்கிறார் .இவளும் நடித்து பின் உண்மையில் காதலில் விழுகிறாள் .
அதர்வா முரளி,அமலாபால்.நாசர் ,ஜெயபிரகாஷ் அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் .வித்தியாசமான கதை என்றாலும் ,தமிழ் திரைப்படத்தில் மன நோயாளி கதையை விடாமல் பிடித்துக் கொண்டு எடுத்து வருகின்றனர் .
மன நோயாளி சென்னையில் இருந்து பெங்களூருக்கு வார வாரம் அவரே கார் ஒட்டி செல்வது நம்பும்படியாக இல்லை .கணினி பொறியாளர்கள் உடன் பணி புரியும் பெண்களை அழைத்து குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்களை சிதைக்கும் அவலத்தை படத்தில் காட்டி உள்ளனர் .படித்த கணினி பொறியாளர்கள் பண்பாடு இன்றி நடந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொன்ற , அதர்வா முரளியை காவல் உயர் அதிகாரி ,அவரே மன்னித்து விட்டு விடுவது நம்பும்படி இல்லை . இதுபோன்ற பல குறைகள் இருந்தாலும் .சிரிப்பு நடிகர் சந்தானம் சில காட்சியில் மட்டும் வந்து சிரிக்க வைக்கின்றார். சந்தானம் வசனத்தில் காதலி அழகாக இருந்தால் ஆண்கள் உண்மையாக காதலிப்பார்கள் அழகு இல்லை என்றால் உண்மையாக காதலிக்க மாட்டார்கள் என்கிறார் .தவறு .புற அழகைப் பார்த்து வருவதல்ல உண்மை காதல் .அக அழகைப் பார்த்து வருவதுதான் உண்மை காதல் .
நடக்க முடியாத மகனை நடக்க வைத்து, படிக்க வைத்து உலகம் வியக்கும் வண்ணம் வருவான் என்ற உறுதியோடு இருக்கும் உன்னத தாய் .கடைசியாக மகன் வந்து பால் விட்டதும் உயிர் விடும் காட்சி நெகிழ்ச்சி .இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .தாய் மகன் பாசத்தை உணர்த்தி கண்ணில் கண்ணீர் வைத்துவிட்டார்.படம் முடிந்து வெளியே வந்த பிறகும் தாய் நம் கண் முன் வருகின்றார் . அமலாபால் தெய்வத்திருமகள் திரைபடத்தில் நடித்துப் போல இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
கதாநாயகன் அதர்வா முரளி ,மறைந்த நடிகர் முரளியின் மகன் .அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக நன்றாக நடித்து உள்ளார் .யோகா கற்றவர் என்பதால் சண்டைக் காட்சியில் சிறப்பாக சண்டை செய்கின்றார் .வெள்ளைக்காரகள் இருவருடன் மோதும் காட்சி நன்று .பின்னணி இசை மிக நன்று .
--

கருத்துகள்
கருத்துரையிடுக