உறவின் கவிதைகள்
நூல் ஆசிரியர் கவிஞர் ரூபி
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அட்டைப்படத்தில் மழலைகள் அலங்கரிப்பது மிக அருமை .நூலில் 51 கவிதைகள் உள்ளது அனைத்தும் மிக நன்று .கவிதைகள் அன்பிலே தொடங்கி ,தேசத்தில் முடிகின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் ரூபி பள்ளி ஆசிரியர் என்பதால் ,தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக ,பண்பாடு ,ஒழுக்கம் போதிக்கும் விதமாக ,வெற்றிக்கான வழி கூறும் விதமாக கவிதைகள் உள்ளது .பாராட்டுக்கள். இந்நூலை பாசமிகு அண்ணன் திரு .வின்சென்ட் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பதால் நூலின் தலைப்பு பொருத்தமாக உள்ளது .கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா ,முனைவர் .சகோ .ஜோசபின் ,அருட்பணி அணி சேவியர் ,நிர்மலா தேவி, கவிஞர் கோ ஆகியோரின் அணிந்துரை வாழ்த்துரை நூலிற்கு தோரணமாக உள்ளது .
முதல் கவிதையில் அன்பிற்கான விளக்கத்தை அற்புதமாகப் பதிவு செய்துள்ளார் .
அன்பிலே !
அன்பு பொறுமை உள்ளது !
அன்பு நன்மை செய்யும் !
அன்பு உண்மையில் மகிழும் !
அன்பு மன உறுதியில் இருக்கும் 1
அன்பு ஒரு போதும் அழியாது !
முயற்சி !
முயற்சி என்ற ஒன்று இல்லாதிருந்தால் !
ஆதிகால மனித வாழ்வே நீடித்திருக்கும் !
முயற்சியின் பலனே அறிவியல் வளர்ச்சி !
முயற்சியே இன்று விண்வெளிப் பயணம் !
முயற்சியின் பலனை மிகச் சிறப்பாகக் கவிதையில் நன்கு பதிவு செய்துள்ளார்கள் .அவர்களுக்குப் பாராட்டுக்கள் .
வெற்றி !
முட்களை அல்ல ரோஜாவைப் பார்ப்போம் !
மகிழ்ச்சியும் வெற்றியும் மனத்தில் நிலைக்கும் !
பலவீனங்களை ஏற்று முன்னேறுவோம் !
வெற்றிக் கனியை எட்டும் கனியாக்குவோம் !
வெற்றிப் விவேகமாகச் சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
நூலாசிரியர் பெண் என்பதால் பெண் விடுதலைப் பற்றியும் கவிதை வடித்துள்ளார் .
பெண்விடுதலை யாசித்துப் பெறும் பிச்சையல்ல !
வேள்வித் தீயில் வெற்றி கண்டிடும் அமுதசுரபி !
பெண்களின் சுவாசமாய்க் கல்வி அமைந்து !
புரட்சியும் புதுமையும் இவ்வையகம் நிறைந்திடட்டும் .
நூல் ஆசிரியர் கவிஞர் ரூபி பள்ளி ஆசிரியர் என்பதால் மாணவர்களுக்காவும் கவிதை எழுதி உள்ளார் .
மாணவர்களே !
இன்னிசை கேளுங்கள் ! ரசிக்கத் தொடங்குங்கள் !
ஓவியம் வரைந்திடுங்கள் ! உணரத் தொடங்குங்கள் !
இயற்கையை நோக்குங்கள் மதிக்கத் தொடங்குங்கள் !
வாழ்க்கையை உணருங்கள் ! வாழத் தொடங்குங்கள் !
இக்கவிதையை மாணவர்கள் கடைப்பிடித்து நடந்தால் கொலை வெறி வராது .நன் நெறி வரும் .
புத்தகம் !
புத்தகம் படிப்பதனால் புதிய கருத்துக்களை !
புத்தகம் படிப்பதனால் புதிய அர்த்தங்களை !
புத்தகம் படிப்பதனால் புதிய சிந்தனைகளை !
புத்தகம் படிப்பதனால் புதிய தன்னம்பிக்கை !
வாழ்வை வசந்தமாக்கும் உயர்ந்த நூல்கள் பற்றி நல்ல கவிதை பாராட்டுக்கள் .
ஒழுக்கம் !
ஒழுக்கம் உள்ளவனை உலகம் உற்று நோக்கும் !
ஒழுக்கம் உள்ளவனை நாடும் வீடும் போற்றும் !
ஒழுக்கம் உள்ளவனை உறவினர் வாழ்த்துவர் !
ஒழுக்கம் உள்ளவனை நண்பர்கள் கொண்டாடுவர் !
உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை வள்ளுவர் வலியுறுத்தி உள்ளார் .வள்ளுவர் வழியில் வடித்த கவிதை மிக நன்று .
உறவு !
உறவால் மிளிர்கிறது அன்பு !
உறவால் மறைகிறது தவறு !
உறவால் தருகிறது மகிழ்ச்சி !
உறவால் உருவாகிறது வளர்ச்சி!
உறவால் மலர்கின்றது நம்பிக்கை !
உறவின் பயனை மேன்மையை உணர்த்திடும் வைர வரிகள் மிக நன்று .கவிதைகள் மூலம் வாழ்வியல் நெறிகளை ,மேன்மைமிக்க
கருத்துக்களை ,வாசகர் மனதில் நமக்கு பதியும் வண்ணம் கவிதையால் பதியம் செய்துள்ளார் .மிக எளிமையாகவும் இனிமையாகவும் கவிதைகள் உள்ளது .கவிதைகளின் முடிவில் பொன்மொழிகள் ,அறிஞர்கள் மிக நல்ல கருத்துக்கள் பிரசுரம் செய்தது மிகச் சிறப்பு .தொடர்ந்து எழுத்துகள் வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
http://en.netlog.com/ rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

http://eluthu.com/user/index.
http://en.netlog.com/
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக