மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்

மரவரம்

நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

 மின்னல் பதிப்பகம் ,
118. எல்டாம்ஸ் ரோடு,சென்னை .18 .விலை ரூபாய் 20

நூலின் அட்டைப்படமும் ,தலைப்பும் மரங்களை நினைவுப் படுத்துகின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் என்ற மாத இதழின் ஆசிரியர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .திருக்குறளில் ஆழ்ந்த புலமை மிக்கவர் .குட்டியூண்டு என்ற நூலின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றவர் . இரண்டாவது ஹைக்கூ நூல் இது .மரம் பற்றியே 203  ஹைக்கூ கவிதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .
இயந்திர மயமான உலகில் நீண்ட நெடிய கருத்துக்களை ,கவிதைகளை வாசிக்க நேரமோ ,பொறுமையோ பலருக்கு இருப்பதில்லை.ஆனால்  , சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஹைக்கூ கவிதைகளை ஆறு வயது முதல் அறுபது வயது வரை விரும்பி    வாசிக்கின்றனர்.ஹைக்கூ கவிதையை வாசிக்கின்றனர் .யோசிக்கின்றனர் .ஹைக்கூ கவிதை ஒன்றுக்குத்தான் வாசிக்கும் வாசகரையும் படைப்பாளி  ஆக்கும் ஆற்றல் உண்டு .அந்த வையில் இந்த நூல் படிக்கும் வாசகர்களும் படைப்பாளி ஆக வாய்ப்பு உள்ளது .  மிகவும் குறைவாக நூலின் விலையை 20 ரூபாய் என்று நிர்ணயம் செய்த பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் .இயற்கை நேசர், நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ,மரங்களை ரசித்து ரசித்து ஹைக்கூ வடித்து நூலைப் படிக்கும் வாசகர்களையும் மரத்தை ரசிக்க வைத்து விடுகிறார் .

கொளுத்தும் கோடை
தாயாய் மரம்
குஞ்சாய் நாம் 
!

மரத்தின் தாயுள்ளத்தை காட்சிப் படுத்தி நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்வெற்றிப் பெறுகின்றார் .  ஹைக்கூ கவிதையின் மூலம் அறிவியல் தகவலும் வழங்கி உள்ளார் .

கிருமிகளைக் கொன்று
உடல் நலம் காக்கின்றது
வேப்பமரக் காற்று 
!

மரம் வெட்டுவது தவறு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .

வெட்டி வீழ்த்தியவனை
வெட்டி வீழ்த்தியது
வெயில் !

திரைப்படப் பாடலை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .

பெற்ற பிள்ளை கைவிட்டான்
கை
விடவே   இல்லை
தென்னம்பிள்ளை
!

இன்னா செய்தாரை திருக்குறள் கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ இதோ !

கல் எறிந்தவனை
நான் வைத்து தண்டித்தது
கனி எறிந்த மரம்  
!

போதிமரம் எதனால்? புகழ் பெற்றது பாருங்கள் .

புத்தன் அமர
புகழ் பெற்றது 
போதிமரம்

ஜோதிடம் பார்ப்பது பணத்தையும் ,நேரத்தையும் விரையம் செய்யும் வேலை .ஜோதிடம் என்பதை பொய்.
பொய் சொல்லும் சோதிடர்களுக்கும் மரம் எப்படி? உதவுது பாருங்கள் .

பொய் கூறிய சோதிடனுக்கும்
சோறு போடுகிறது
மரத்தடி நிழல் !

ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு என்பது காட்சிப் படுத்துதல் .அந்த வகையில் உள்ள ஹைக்கூ .

பட்ட மரத்திற்கு
பச்சைப் பொன்னாடை
படரும்  கொடி
!

பறவைகள் சேர்ந்து வாழ்கின்றன .ஆனால் மனிதன்  தான் சுயநலத்தின் காரணமாக  பிரிந்து வாழ்கிறான் .இன்றைய யதார்த்தை பதிவு செய்யும் ஹைக்கூ .

பலவகைப் பறவைகள்
கூட்டுக்  குடுத்தனமாய்
ஒரே அத்திமரம்
!

மரம் மட்டும் அல்ல மரம் உதிர்க்கும் இலையும் எப்படி உதவுகின்றது என்பதை விளக்கும் ஹைக்கூ .

நீரில் தத்தளிக்கும் எறும்பு
படகாக வருகிறது
மரம் உதிர்த்த இலை
!

ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமையை ,தமிழ் இனத்திற்கு நடந்த அநீதியை ,படுகொலையை கண்டித்து கவிதை எழுதாதவர்கள் கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம் .மனித நேயம் கவிஞனுக்கு இலக்கணம் .அந்த வகையில் மனித நேயத்தோடு  படைத்த ஹைக்கூ .

முள் வேலிக்குள்
மனித மரங்கள் 
ஈழத்தமிழர்கள்  !

சொர்க்கம் என்பது வானில் இல்லை மண்ணில் தான் உள்ளது .என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

சொர்க்கத்தின் முகவரி
சுற்றிலும் மரங்கள்
நடுவே குடில் !

மனிதனுக்கு நாகரீகம் கற்பித்தது மரம் .அதனை நினைவுப்  படுத்தும் ஹைக்கூ .

நிர்வாணமாய் திரிந்தவனுக்கு
முதல் உடுப்பு கொடுத்தது
இலை ஆடை!

இப்படி நூல் முழுவதும் மரமும் ,மரமும் சார்ந்தே ஹைக்கூ கவிதைகள் எழுதி ,நூல்படிக்கும் வாசசகர்கள் மனதிலும்
 மரநேசத்தை வித்துப் போல விதைத்து  வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் .
மரம் பற்றியே முழுமையாக வந்த முதல் ஹைக்கூ நூல் இதுதான் .முத்திரைப் பாதிக்கும் ஹைக்கூ கவிதைகள் படைத்த நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


கருத்துகள்