எது ? காதல் ! கவிஞர் இரா .இரவி

எது ? காதல்  !                 கவிஞர் இரா .இரவி

காதலர் தினம் மட்டும் நினைப்பதல்ல காதல்
காதலர் உயிர் உள்ளவரை நினைப்பதே காதல்

ஒற்றை ரோசாவில் முடிவதல்ல காதல்
பிறவி முழுவதும் தொடர்வதே காதல்
பரிசுப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளுதல்ல காதல்
ஒருவரை
ஒருவர்   புரிந்து கொள்வதே காதல்

கடற்கரையில் பேசுவது மட்டுமல்ல  காதல்
காலம் முழுவதும் இணைந்து    இருப்பதே காதல்

காதலர்கள் கூடிக் களைவது அல்ல காதல்
களையாமல் நிலைத்து இருப்பதுவே காதல்

உடல் தீண்டல் மட்டுமல்ல காதல்
உள்ளத் தீண்டலே உண்மைக் காதல்

புத்தாடை வழங்குவது அல்ல காதல்
புரிந்து புத்துணர்வு வழங்குவதே காதல்

உயிரை விடுவது அல்ல காதல்
உயிர் உள்ளவரை போராடுவதே காதல்

இன்பத்தை மட்டுமே எதிர்பார்ப்பதல்ல காதல்
துன்பத்தையும் ஏற்றுக் கொள்வதே காதல்


லாப நட்டக் கணக்கு பார்ப்ல்ல காதல் 
கஷ்டம் நஷ்டம் பாராததே
காதல்

காமத்தால் வருவது அல்ல காதல்
காலத்தால் என்றும் அழியாததே
காதல்

கருத்துகள்