வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 20 ,மின்னல் கலைக் கூடம், 118 .எல்டாம்ஸ் ரோடு சென்னை.18
அட்டைப்பட வடிவைமைப்பு மிக அருமை .மகாகவி பாரதியாரின் வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .இந்நூலை தன் கிராமத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளம் காத்திட அரும்பணி ஆற்றி வரும் கவிஞர் சீனி .ரவி பாரதி அவர்களுக்கு காணிக்கை யாக்கி இருபது மிகச் சிறப்பு .
சுற்றுச் சுழல் விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ சென்ரியு கவிதைகளின் தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி உழைப்பாளி .கவிஞர் கார்முகிலோன் அணிந்துரை அற்புதம் . கவிஞர் வசீகரன் வாழ்த்துரை மிக நன்று .இந்நூலில் ஹைக்கூ சென்ரியு கவிதைகள் இடையே பஞ்ச பூதங்கள் மற்றும் பறவைகள் ,மரங்கள் ,யாதுமாகி நஞ்சு ஆகிய தலைப்புகளுக்கு பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுத்து விளக்க உரையுடன் இடம் பெறச் செய்தது கூடுதல் சிறப்பு .
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
இன்று
வறண்ட பாலை
மிகச் சிக்கனமான சொற்களைக் கொண்டு மிகப் பெரிய கருத்துக்களை உணர்த்துவது ஹைக்கூ .தமிழ் இனத்தை அழித்த ஈழத்தில் நடந்த படுகொலைகளை ,அவலத்தை, கொடுமையை நெஞ்சு இருக்கும் வரை மறக்க முடியாது .அது பற்றி ஒரு ஹைக்கூ
வேரோடு சாயும்
புத்தனின் போதிமரம்
சிக்கித் தவிக்கும் தமிழீழம்
பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் மிகப் பெரிய பிள்ளையார் சிலைகளை கடலில் கரைத்து கடலை மாசுப் படுத்தும் அவலத்தை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ
காக்கும் கடவுள்
மாசானால்
கடலில் கரையா பிள்ளையார்
இலைகர்கள் பலர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை கடிக்கும் விதமாக
வெண்சுருட்டு மோகத்தில்
அதிகரிக்கும் வெண்புகை
பகையாகும் உயிர்
சுற்றுச் சுழல் விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ எழுதுவது எளிதல்ல .கடின முயற்சியில் நூல் ஆசிரியர் கன்னிக்கோவில் ராஜா வெற்றி பெற்றுள்ளார் .
தூறல் மழை
மண்வாசனை நுகர்கையில்
கந்தகநெடி
காட்சிப் படுத்தும் ஹைக்கூ கவிதையில் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .
குளிர்கால இரவு
போர்வை தேடும் மனிதன்
பனியில் குளிக்கும் மலர்கள்
அம்மாவும் மரமும் ஒன்று என்று உணர்த்திடும் விதமாக அம்மாவின் மேன்மை உணர்த்தும் விதமாக !
மரத்தில் சாய்ந்தேன்
தாய்மடி சுகம்
கிராமத்தில் அம்மா
ஹைக்கூ மூலம் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா .
குறிபார்க்கும் வேடன்
கண்ணில் பாய்ந்தது
மழைத்தூறல்
அணு உலை உயிருக்கு உலை என்பதை உணர்த்திடும் உன்னதப் படைப்பாளி !
நாடெங்கும் நிலநடுக்கும்
வெற்றிக் கொண்டாடத்தில்
அணு உலை
சுற்றுச் சுழல் ஆத்திச்சூடி மிக நன்று .சூழல் மொழி !
உடலுக்கு உயிர் அவசியம்
உலகிற்கு மரம் அவசியம்
சாயப் பட்டறை கழிவு மாக்கள் குடித்தால் அழிவு
சுற்றுச் சுழல் கேடு சுகாதாரத்தை உடனே நாடு
டயர்கள் பலவற்றை எரித்தால் - பழுதாகும் காற்றின் இதயம்
நீரை சிக்கனமாக்கு -சந்ததியை வளமாய் மாற்று
பூமியின் பசுமை -சிதைப்பது மடமை
மரங்கள் தருவது உயிர்வளி மக்கள் கொடுப்பது உயிர்வலி
வாழை தென்னை பனை -வளமாக்கும் உன்னை சூழல் மொழி !இப்படி சிந்திக்க வைக்கும் இந்த நூலின் மகுடமாக மின்னுகின்றது .பல்சுவை இளகிய விருந்தாக இந்நூலைப் படைத்தது உள்ளார் .படைப்பாளியின் கடமையை செம்மையாகச் செய்துள்ளார் .தரத்திற்கு பாராட்டுக்கள் .புதிய முயற்சி ! மானுட வளர்ச்சி !

கருத்துகள்
கருத்துரையிடுக