மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மெரினா

எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பசங்க படத்திற்காக தேசிய விருதுப் பெற்ற  இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் தரமான படைப்பு .இந்தப் படத்திற்கும் தேசிய விருது உறுதி .வெட்டுக் குத்து ,கொலைவெறி பாடல் ,ஆபாச நடனம் ,இரட்டை அர்த்த வசனம் ,நடிகர்களின்  புகழ்ப் பாடும் கதை இன்றி, நடிகையின் சதையை நம்பிப் படம் எடுக்கும் காலத்தில் ,பேன்ட்டை அவிழ்த்து ஜட்டியோடு நிற்க வைத்து படம் இயக்கி விட்டு ,அது உருவான  விதம் பற்றி பேட்டி கொடுக்கும் அனைத்து மசாலா இயக்குனர்களையும் அமர   வைத்து இந்தப்படத்தை போட்டுக் காட்டடித்  திருத்த வேண்டும் .

துளி கூட ஆபாசம் இன்றி மிகச் சிறப்பாக  மெரினா கடற்கரையில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டி வெற்றிப் பெற்றுள்ளார் .இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை இல்லை .கொடூரமான வில்லன் இல்லை .மிகப் பெரிய கதாநாயகனும் இல்லை. ஆனாலும் படம் நன்றாக உள்ளது .இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் நம் மனதில் நிற்கின்றன .மெரினா கடற்கரையில் தண்ணீர் ,சுண்டல் ,சங்கு,தேநீர் ,விற்கும் சிறுவர்கள் ,
மகன் மருமகள் செத்துத் தொலைய    வில்லை என்று திட்டுவதுக்  கேட்டு ,வீட்டை விட்டு வெளியேறி  வந்து அவர்களை அவமானப் படுத்த பிச்சை எடுக்கும் முதியவரை ,சிறுவன் தாத்தா பிச்சை எடுக்காதிங்க என்றதும் .முதியவர் பிச்சை எடுப்பதை விட்டு விட்டு, புல்லாங்குழல் விற்கும் காட்சி நெகிழ்ச்சி .மன நிலை குன்றிய பாத்திரம் ,மிகப் பொருத்தமான பழைய பாடல்கள் பாடும் தெருப்  பாடகராக  வரும் பாத்திரம் ,அவர் மகளாக வரும் ஆடும் சிறுமி .அந்தச் சிறுமிக்கு உடல் நலம் குன்றியதும் மருத்துவச் செலவிற்கும் கடற்கரைச் சிறுவர்கள் முதியவர் அனைவரும் மனித நேயம் கற்பிக்கின்றனர் .குதிரை பயிற்சியாளர் என  எல்லாப் பாத்திரமும் அற்புதம் . படம் முழுவதும் முத்திரை உள்ளது .நம் எதிர்ப்பார்ப்பு பொய்க்க வில்லை . 

மெரினா கடற்கரையில் காதல் செய்யும் அறிமுக நாயகன் சிவ கார்த்திகேயன் ,கதாநாயகி ஓவியா இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .நல்ல நகைச்சுவை வசனங்கள் .இன்றைய காதலை நன்றாகப் பதிவு செய்துள்ளார் .   காதல் பற்றி சிந்திக்க வைக்கும் வைர வரிகள் .வசனம் மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள்

படத்தின் இறுதிக் காட்சில் நடக்கும் குதிரை ப் போட்டியை, கொடி அசைத்து துவங்கி வைக்கும் ஒரு காட்சியில் இயக்குனர் பாண்டிராஜ் வந்து போகிறார் .காதலன் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக பெரிய பெட்டி தர ,அதை பிரித்துப் பார்க்க , பார்க்க  உள்ளே சின்ன பெட்டியாக வந்து கடைசியில் இட்டிலியும் கெட்டி  சட்டினியும்   இருக்க .அந்த கெட்டி சட்டினியும் கெட்டுப் போய் இருக்க ,நல்ல நகைச்சுவை .


குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்து சிறுவர்களை படிக்க வைத்தால் மிகப் பெரிய தலைவர்களாக வருவார்கள் என்று உணர்த்தும் மிக நல்லப் பாத்திரத்தில் பசங்க திரைப்  படத்தில்  சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்பிரகாஷ் இந்தப் படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .இது படம் அல்ல பாடம் என்று சொல்வார்கள் .அது உண்மை .சிறுவர்களின் நண்பனை காவலர்கள் இழுத்துச் செல்லும்போது தவிக்கும் சிறுவர்கள் .முதியவர் இறந்ததும் அவரி காவலர்கள் எடுத்துச் செல்ல எத்தனிக்கும்போது  தபால் காராரை வரவழைத்து தடுத்து ,முதியவரின் இறுதிச் சடங்கை சிறப்பாக நடத்தும் சிறுவர்கள் நம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறார்கள்.மனித நேயம் கற்பிக்கும் படம் .

முகவரி இன்றி மெரினா கடற்கரையில் ஓட்டை படகில் வாழ்ந்து வரும்    ஆதரவற்ற சிறுவர்கள் தினமும் எங்களுக்கு கடிதம் இல்லையா ? என கேட்பதால் தபால்காரர் எல்லாச் சிறுவர்களுக்கும் பொங்கல் வாழ்த்து மடலும் ,அதில் உள்ளே ரூபாய் பணமும் வைத்துக் கொடுத்து சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மனத நேயம் .உறவுகளால் கைவிடப் பட்ட முதியவர்கள் படும் பாடு நன்கு உணர்த்தி உள்ளார் .சென்னையின் யதார்த்த நிலை உண்மை முகம் படம் பிடித்துக் காட்டி உள்ளா இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .அறிமுக இசை அமைப்பாளரின் பாடலும் பின்னணி இசையும் நன்று .

      சிவ கார்த்திகேயன் பெயருக்குத்தான் கதாநாயகன் படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களுமே கதாநாயகன்தான் .குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படம் வந்து வெகு நாட்கள் ஆகி விட்டன . ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் .
  
இயக்குனர் திரு .பாண்டிராஜ் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்.
  படம் முடிந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுகின்றது .எலோரும் எழுந்து நின்று வெற்றிப் படம் தந்த இயக்குனருக்கு மரியாதை தரும் விதமாக இருந்தாலும் ,இந்த இயந்திர உலகத்தில் படம் முடிந்தவுடன் வரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முடியும் வரை நிற்க வில்லை ,எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் படத்தின் ஆரம்பத்தில் வரும் மாறு செய்யலாம் .

கருத்துகள்