நூலின் பெயர் குடத்து விளக்கு
நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்
அணிந்துரை கவிஞர் இரா .இரவி
கவிஞர் பரந்தாமன் அவர்கள் கோழி தன் முட்டைகளை அடைகாப்பதுப்போல ,தனுது கவிதைகளை அடை காத்து இன்று நூலாக்கி இருக்கிறார்கள்.
மணி விழா காணும்போது மணியான கவிதைகளைத் தொகுத்து கவிமாலை ஆக்கி உள்ளார்கள் . குடத்து விளக்காக இருந்து தன் கவிதைகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்துள்ளார்கள் .உள்ளத்தில் உள்ளது கவிதை , உள்ளத்து உணர்வு கவிதை,சொற்களின் நடனம் கவிதை.நூலின் முதல் கவிதையிலேயே முத்திரைப் பதித்து உள்ளார்கள் .
தமிழுக்கு யாருண்டு ?
------------------------------ --------------
விண்ணுக்கு முகிலுண்டு அழகைத் தீட்ட
விளக்கிற்கு ஒளியுண்டு இருளைப் போக்க
கண்ணுக்கு இமையுண்டு காவல் காக்க
கன்னித்தமிழுக்கு யாருண்டு புகழைச்சேர்க்க !
உலகின் முதல் மொழியான தமிழ் மொழிக்கு புகழைச்சேர்க்க வாருங்கள் என்று அழைக்கின்றார்.
ஒரு சுவர் பெண்ணாகிறது !
------------------------------ -----------------------
நாலஞ்சு வருசமா நானிருந்தேன் நிம்மதியா
நாட்டில் தேர்தல் வந்தா நாந்தானா அகப்பட்டேன் .
சுவரின் மனதைப் படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் I.பரந்தாமன்.
பெண்கள் படும்பாடு !
------------------------------ ----------
விடிஞ்சு எந்திருச்சா வெளக்குமாற எடுக்கனும்
வீடு பூரா சுத்தம் பண்ணி ,வெந்நீரும் போடனும் .
பெண்கள் படும் இன்னலை கவிதையில் நன்கு வடித்துள்ளார் .பட்டங்கள் படித்து பாரினைப் பெண்கள் ஆண்டபோதும் ,மிகப்பெரிய பதவிகளை அடைந்தபோதும் ,விமானப்படையில் பெண்கள் இடம் பெற்றபோதும் ,வீட்டில் இன்னும் அடிமையாகவே நடத்தப்படுகிறார்கள் .பெண்களுக்கு விடுதலை ஏட்டில் எழுத்தில் கொடுத்தோம் .நாட்டில், வீட்டில் நடைமுறையில் தந்தோமா ? என்று சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றார் .
நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்
பெண்கள் பார்க்கும் வேலையை ஆண்களும் பகிர்ந்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கின்றார் .இதுபோன்ற விழிப்புணர்வுக் கவிதைகள் நூலில் பல உள்ளது .
குழந்தைப் பாட்டு !
------------------------------ ------
கோழி கோழி ,குஞ்சுக் கோழி
குருவி குருவி குஞ்சுக்குருவி
பட்டு விரலால் அதைத் தொட்டுப்பார் -- அவை
பறக்கும் அழகை ரசித்துப்பார் !
மகாகவி பாரதியார் போல பறவை நேசத்துடன் குழந்தைப்பாட்டும் பாடி உள்ளார் .
பாரதி இட்ட தீ
--------------------------
தனிமனிதனுக்கு உணவில்லைஎன்றால்
ஜெகத்தினை அழிக்கச் சொன்னாய் !
அழித்து விட்டார்கள் !
ஜெகத்தினை அல்ல மனிதர்களை !
இந்தக் கவிதையைப் படித்தப்போது ஈழத்திலே பல்லாயிரம் மக்கள் அழித்த கொடுமையான நிகழ்வு என் நினைவிற்கு வந்தது .அதுதான் படைப்பாளியின் வெற்றி .
என்றுமே காந்திதான் !
------------------------------ --------
ஆண்டு மகாத்மாவின் அஹிம்சையும் உண்ணா நோன்பும்
ஆட்சியை மாற்றிக்காட்டியது !
இன்றும் மகாத்மாவின் படம் அச்சிட்ட காகிதம் கூ ட
(ரூபாய் நோட்டு ) ஆட்சியை ம மாற்றும் வல்லமை படைத்தது .
ஓட்டுக்கு நோட்டுக் கொடுக்கும் பழக்கத்தை சாடும் கவிதையாக உள்ளது . M.P., M.L.A.விலைபோவதையும் குறிப்பிடுவதாக உள்ளது .
நிலம்
-----------------
கூறு போட்டாலும்
சோறு போடும்
பொறுமை உள்ள தாய் !
பணம்
----------------------
இல்லாதவனுக்கு இறைவன்
இருப்பவனுக்கு அடிமை !
இது போன்று சுவைமிக்க துளிப்பாக்களும் நூலில் உள்ளது .
உரைகல் !
-----------------
தோல்வி எனக்கு மிகவும் பிடிக்கும்
ஏனென்றால்
முயற்சித்தவன் தான் தோல்வி அடைகிறான்.
தன்னம்பிக்கை விதைக்கும் கவிதையாக உள்ளது .
அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதிவிடக் கூடாது .என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் .கவிதையில் தமிழ் உணர்வு, காதல் உணர்வு ,தத்துவம் ,விழிப்புணர்வு , தன்னம்பிக்கை என அனைத்தும் உள்ளது .பாராட்டுக்கள் .தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டுமென்ற என் ஆவலைச் சொல்லி முடிக்கின்றேன்.வாழ்த்த வயதில்லைவணங்கி மகிழ்கின்றேன் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
http://en.netlog.com/ rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்
அணிந்துரை கவிஞர் இரா .இரவி
கவிஞர் பரந்தாமன் அவர்கள் கோழி தன் முட்டைகளை அடைகாப்பதுப்போல ,தனுது கவிதைகளை அடை காத்து இன்று நூலாக்கி இருக்கிறார்கள்.
மணி விழா காணும்போது மணியான கவிதைகளைத் தொகுத்து கவிமாலை ஆக்கி உள்ளார்கள் . குடத்து விளக்காக இருந்து தன் கவிதைகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்துள்ளார்கள் .உள்ளத்தில் உள்ளது கவிதை , உள்ளத்து உணர்வு கவிதை,சொற்களின் நடனம் கவிதை.நூலின் முதல் கவிதையிலேயே முத்திரைப் பதித்து உள்ளார்கள் .
தமிழுக்கு யாருண்டு ?
------------------------------
விண்ணுக்கு முகிலுண்டு அழகைத் தீட்ட
விளக்கிற்கு ஒளியுண்டு இருளைப் போக்க
கண்ணுக்கு இமையுண்டு காவல் காக்க
கன்னித்தமிழுக்கு யாருண்டு புகழைச்சேர்க்க !
உலகின் முதல் மொழியான தமிழ் மொழிக்கு புகழைச்சேர்க்க வாருங்கள் என்று அழைக்கின்றார்.
ஒரு சுவர் பெண்ணாகிறது !
------------------------------
நாலஞ்சு வருசமா நானிருந்தேன் நிம்மதியா
நாட்டில் தேர்தல் வந்தா நாந்தானா அகப்பட்டேன் .
சுவரின் மனதைப் படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் I.பரந்தாமன்.
பெண்கள் படும்பாடு !
------------------------------
விடிஞ்சு எந்திருச்சா வெளக்குமாற எடுக்கனும்
வீடு பூரா சுத்தம் பண்ணி ,வெந்நீரும் போடனும் .
பெண்கள் படும் இன்னலை கவிதையில் நன்கு வடித்துள்ளார் .பட்டங்கள் படித்து பாரினைப் பெண்கள் ஆண்டபோதும் ,மிகப்பெரிய பதவிகளை அடைந்தபோதும் ,விமானப்படையில் பெண்கள் இடம் பெற்றபோதும் ,வீட்டில் இன்னும் அடிமையாகவே நடத்தப்படுகிறார்கள் .பெண்களுக்கு விடுதலை ஏட்டில் எழுத்தில் கொடுத்தோம் .நாட்டில், வீட்டில் நடைமுறையில் தந்தோமா ? என்று சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றார் .
நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்
பெண்கள் பார்க்கும் வேலையை ஆண்களும் பகிர்ந்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கின்றார் .இதுபோன்ற விழிப்புணர்வுக் கவிதைகள் நூலில் பல உள்ளது .
குழந்தைப் பாட்டு !
------------------------------
கோழி கோழி ,குஞ்சுக் கோழி
குருவி குருவி குஞ்சுக்குருவி
பட்டு விரலால் அதைத் தொட்டுப்பார் -- அவை
பறக்கும் அழகை ரசித்துப்பார் !
மகாகவி பாரதியார் போல பறவை நேசத்துடன் குழந்தைப்பாட்டும் பாடி உள்ளார் .
பாரதி இட்ட தீ
--------------------------
தனிமனிதனுக்கு உணவில்லைஎன்றால்
ஜெகத்தினை அழிக்கச் சொன்னாய் !
அழித்து விட்டார்கள் !
ஜெகத்தினை அல்ல மனிதர்களை !
இந்தக் கவிதையைப் படித்தப்போது ஈழத்திலே பல்லாயிரம் மக்கள் அழித்த கொடுமையான நிகழ்வு என் நினைவிற்கு வந்தது .அதுதான் படைப்பாளியின் வெற்றி .
என்றுமே காந்திதான் !
------------------------------
ஆண்டு மகாத்மாவின் அஹிம்சையும் உண்ணா நோன்பும்
ஆட்சியை மாற்றிக்காட்டியது !
இன்றும் மகாத்மாவின் படம் அச்சிட்ட காகிதம் கூ ட
(ரூபாய் நோட்டு ) ஆட்சியை ம மாற்றும் வல்லமை படைத்தது .
ஓட்டுக்கு நோட்டுக் கொடுக்கும் பழக்கத்தை சாடும் கவிதையாக உள்ளது . M.P., M.L.A.விலைபோவதையும் குறிப்பிடுவதாக உள்ளது .
நிலம்
-----------------
கூறு போட்டாலும்
சோறு போடும்
பொறுமை உள்ள தாய் !
பணம்
----------------------
இல்லாதவனுக்கு இறைவன்
இருப்பவனுக்கு அடிமை !
இது போன்று சுவைமிக்க துளிப்பாக்களும் நூலில் உள்ளது .
உரைகல் !
-----------------
தோல்வி எனக்கு மிகவும் பிடிக்கும்
ஏனென்றால்
முயற்சித்தவன் தான் தோல்வி அடைகிறான்.
தன்னம்பிக்கை விதைக்கும் கவிதையாக உள்ளது .
அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதிவிடக் கூடாது .என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் .கவிதையில் தமிழ் உணர்வு, காதல் உணர்வு ,தத்துவம் ,விழிப்புணர்வு , தன்னம்பிக்கை என அனைத்தும் உள்ளது .பாராட்டுக்கள் .தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டுமென்ற என் ஆவலைச் சொல்லி முடிக்கின்றேன்.வாழ்த்த வயதில்லைவணங்கி மகிழ்கின்றேன் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
http://en.netlog.com/
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக