மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி

மருத்துவர்கள் உயிர் காக்கும் உன்னதப்  பணி செய்பவர்கள் ,யாரோ ஒரு காட்டுமிராண்டி மருத்துவரை வெட்டிவிட்டான் என்பதற்காக அனைத்து  மருத்துவர்களும்   வேலை நிறுத்தம் செய்வது அபத்தம் .படிக்காத பாம
ர்கள் போல ,படித்த மருத்துவர்கள் உணர்ச்சிவசப் படுவது தவறு .இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர் .இன்று போகும் உயிர்களுக்கு யார் ?பொறுப்பு .எத்தனை  கோடி கொட்டிக் கொடுத்தாலும் இறந்த உயிரை திருப்பி தர முடியுமா ?

பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா? ஏன் ? இந்த கொலை வெறி  .கொலை வெறி  பாடல் பாடியவருக்கு ,பாரதப் பிரதமர் பாராட்டி விருந்து கொடுத்த காரணத்தால் ,கொலை வெறி  மருத்துவர்களையும் பற்றிக் கொண்டதோ !
மருத்துவர்கள் மீதான நன் மதிப்பை குறைப்பதற்குதான் இந்த வேலை நிறுத்தம் உதவும் .சட்டப்படி மருத்துவரை கொலை செய்த கொலைகாரகளை கைது செய்து விட்டனர் .மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு காவலரை நியமிக்க வேண்டுமா ?மருத்துவர்களுக்கு அவர்களது செயல்தான் பாதுகாப்பு.

தன்  உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை  கடவுளாக வணங்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன் .பணத்தை பெரிதாக எண்ணாமல் உயிர் காப்பதைக் கடமையாகக் கொண்ட மிகச் சிறந்த மருத்துவர்களை நான் சந்தித்து இருக்கிறேன் .பல நல்ல மருத்துவர்கள் என் நண்பர்கள் .எத்தனை கோடி கொடுத்தாலும் நான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என்று சொல்லி, பிறந்த மண் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல மருத்துவர்களை நான் பார்த்து இருக்கிறேன் .இரவு, பகல் பாராமல் உயிர் காக்க உடனே வரும் மருத்துவர்கள் உண்டு .



மனைவி  இறந்த கோபத்தில் கணவன் கொலை  செய்து விட்டான் .மிகப் பெரிய தவறுதான் .தண்டிக்கப்பட வேண்டும் .மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவன் செய்த கொலைக்கு பதிலாக இன்றைக்கு வேலை நிறுத்தம் என்ற பெயரில் நடுக்கும் கொலைக்கு யாருக்கு தண்டனை கொடுப்பது? மருத்துவர்கள் எல்லோரும் உயர்ந்த பணி செய்பவர்கள் ,
ஆனால்  வானில் இருந்து  இறங்கி வந்த தேவ தூதர்கள் அல்லவே .பெரும்பாலான மருத்துவர்கள் மனசாட்சிப்படி நடந்தாலும் .ஒரு சில மருத்துவர்கள் ரமணா திரைப்படத்தில் வருவது போல செத்தப்  பிணத்திற்கு    வைத்தியம் பார்த்து கட்டணம்  வாங்கிய வரலாறு உண்டு .இன்றைக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றில் கமிசன் வாங்காத மருத்துவர்களை விரல் விட்டு எண்ணி  விடலாம் .

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை நலதாக இருக்கட்டும் .

கார்போரேட் மருத்துவமனைகளில் நடக்கும் பகல் கொள்ளை ,பணக் கொள்ளை உலகம் அறிந்த ஒன்று .மருத்துவர்கள் யாருமே தவறே செய்தது இல்லை என்று அறுதி  இட்டுக்கூற   முடியுமா?  நல்வர்கள் கேட்டவர்கள் எல்லாத் தொழிலும் உண்டு .ஆனால் உயர்ந்த பணியான அல்ல அல்ல சேவையான மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மனசாட்சியோடு மிகவும் கவனமாகவும் அர்ப்பணிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் .சமுதாயத்தில் உயிர் காக்கும் உன்னதப்  பொறுப்பு  மருத்துவர்களுக்கு உண்டு .  மருத்துவர்கள்  மருத்துவம் படிக்க அரசாங்கமும் பல கோடி  பணம் செலவழித்து வருகின்றது .எனவே மருத்துவர்கள் சமூக சிந்தையுடன்  வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும் .இனி எப்பொதும் வேலை நிறுத்தம் செய்வது இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டும் .வர வில்லைஎன்றால் அரசு ,அவசியப் பணி புரியும்   மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்.
--
நன்றி

அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்