ஹைக்கூ கவிஞர் இரா. இரவி

ஹைக்கூ            கவிஞர் இரா. இரவி 

மலரே ரசித்தது
மலர்க்  கண்காட்சி
என்னவள்

வண்ணங்கள் எத்தனை
உணர்த்தியது 
மலர்க்  கண்காட்சி

இயற்கையின் மேன்மை
இனிதே சொல்லியது
மலர்க்  கண்காட்சி


நினைவிற்கு வந்தது
சரவிளக்கு
பொன்சாய்மரம் 


பலன் தரவில்லை
பெயர்
வாகை மரம் 


பயணத்தில்
உடன் வரவில்லை
வந்தால் நினைவில்


வரப்பு உயர
நீர் உயரும்
வரப்பு ?


எங்கெங்கோ மலர்ந்த
மலர்களை இணைத்தது
நார்

 எங்கெங்கோ பிறந்த
இருவரை இணைத்தது
காதல்

வழியே
தெரியவில்லை
வழிகாட்டி ?

சிறகுகள் அ
சைத்து
 சிகரம் தொட்டது
பறவை

விலைவாசி
ஆலைக் கரும்பாக
மக்கள்

காற்றாடி
சுழன்று
தந்தது மின்சாரம்

 

விலை ஏறியது
வருத்தமில்லை
குடிகாரன்

கருத்துகள்