இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இலக்கிய சங்கமம்

நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காவ்யா பதிப்பகம் சென்னை   விலை
ரூ 90

தமிழகத்தில் இலக்கிய இணையர் என்றால் தமிழ்த்
தேனீ  இரா .மோகன் ,தமிழ்ச்சுடர்   நிர்மலா மோகன் .கர்னாடகத்தில்  இலக்கிய இணையர் என்றால் முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி.இருவரும் பெங்களூர்த்   தமிழ்ச்சங்கத்தில் தங்களை இணைத்துக்    கொண்டு தமிழ்ப்பணி செய்து வருகின்றனர் .தமிழ் இலக்கியங்களை கன்னடத்தில் மொழி பெயர்க்கும் பணி செய்து வருகின்றனர் .திருக்குறளை கன்னடத்தில் படித்து இருந்தால் திருவள்ளுவர் சிலை திறப்பிற்கு பல வருடங்கள் தடை செய்து இருக்க மாட்டார்கள் என எண்ண தோன்றுகிறது . 

நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரிஅவர்கள் இலக்கிய சங்கமம் என்ற இந்த நூலில் தமிழ் இலக்கியத்தில் உள்ள நுட்பங்களை, பெருமைகளை ,ஆற்றல்களை வெளிப்படுத்தும் விதமாக மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் .    நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி தமிழ் பேராசிரியராகவும் ,தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்த காரணத்தால் இலக்கிய ஈடுப்பாட்டின் காரணமாக நல்ல ஆய்வு செய்து நூல் எழுதி உள்ளார்கள் .இந்த நூலைப் படித்து விட்டு ஒவ்வொரு தமிழரும், தமிழ் இலக்கியத்தில் உள்ள அளவிற்கு நல்ல கருத்துக்கள் உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை  என்று மார் தட்டிக் கொள்ளலாம் .

                    12 தலைப்புகளில்   மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது .தமிழ் இலக்கியங்களில் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டி உள்ளார் . மனோன்மணீயம் ,முத்தொள்ளாயிரம் ,பெரிய புராணம் ,திருக்குறள் ,கம்ப ராமாயணம் இவற்றில் உள்ள இயற்கைக் காட்சிகளை பாடல் வரிகளுடன் மிக அழகாக விளக்கி உள்ளார்கள் .
திருவள்ளுவர் -சமுதாய வழிகாட்டி என்ற தலைப்பில் உள்ளக் கட்டுரை உலகப் பொது மறையான
திருக்குறளின் சிறப்பை நன்கு எடுத்து இயம்பி உள்ளார் .   

திருக்குறள் அ என்னும்  உயிர் எழுத்தில் தொடங்கி ன்  என்னும் மெய் எழுத்தில் முடிகின்றது என்ற தகவல் நூலில் உள்ளது .
அறத்தின் சிறப்பு

அழுக்காறு  அவா வெகுளி இன்னாச்சொல்
ன்நான்கும் இழுக்கா இயன்றதறம்                               குறள் 35

முக்கியமான திருக்குறளும் அதற்க்கான விளக்கமும் மிகச் சிறப்பாக உள்ளது .
சித்திரம் வரையும் ஓவியன் ,தன்னுடைய அகக் கண்ணால் உணர்ந்து ,அழகான சித்திரத்தை வரைந்து ,தானும் மகிழ்வதுடன் பிறரையும் மகிழ்வடையச் செய்கிறான் .அதுபோல திருவள்ளுவர் தன் 
அகக் கண்ணால் உணர்ந்தவற்றை திருக்குறளின் வாயிலாக வடித்துக் காட்டி தானும் மகிழ்ந்து பிறரையும் மனம் மகிழச் செய்துள்ளார் .அதுபோல இந்நூல்   முனைவர் அ.சங்கரி தமிழ் இலக்கியங்களில் தான் படித்து மகிழ்ந்த காட்சிகளைக் கட்டுரையாக்கி   வாசகர்களை மகிழ்வித்துள்ளார் .

தமிழ் இலக்கியங்களில் கணிதம் என்ற கட்டுரைப் படித்து வியந்துப் போனேன்.கால அளவையாக தமிழன் அன்றே பயன்படுத்தியச் சொற்கள் பாருங்கள் .இமை ,நொடி , கடிகை ,நாழிகை,மணி இந்தச் சொற்கள் எந்தப் பாடலில் உள்ளது என்பதை விளக்கி உள்ளார்.
தமிழர்களின் விருந்தோம்பல் பற்றி எழுதுவதோடு நின்று விடாமல் ,  
பெங்களூர்த்   தமிழ்ச்சங்கத்தில் பட்டி மன்றம் பேச வந்த  தமிழ்த்தேனீ  இரா .மோகன் அணியினர் அனைவரையும் இல்லத்திற்கு அழைத்து ,தன் கைப்பட சமைத்து அருஞ்சுவை உணவு கொடுத்து ,தன் படைப்புகளான அரிய நூல்களில் கையொப்பம் இட்டுக் கொடுத்து ,அன்பைப் பொழிந்து   முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி இணையர் தமிழர்களின் விருந்தோம்பல்இன்றும் கடைப் பிடித்து வருகின்றனர் .

புகழ்ப்பெற்ற தசராப்  பண்டிகை வரலாறு பற்றி ஒரு கட்டுரை  உள்ளது .திருக்குறள் புறநானூறு ,தொல்காப்பியம் ,பரிபாடல் ,கம்ப ராமாயணம் தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்துப் படித்து ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள் . பெண்ணியம் அன்றும் இன்றும் கட்டுரை மிகச் சிறப்பு .

ஆணாதிக்கம் விதைக்கும் சொல்லாடல்களுக்கான க
ன்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார் .

பொம்புளை சிரிச்சாப் போச்சு
புகையிலை விரிச்சாப்
போச்சு

அறியாமை பெண்ணிற்கழகு

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
சந்திரன் 
கெட்டதும் பெண்ணாலே

இது போன்ற
சொல்லாடல்கள் சமுதாயத்தில் ஒழிக்கப் பட வேண்டும் .
ஆளுமைத்திறன் பற்றிய கட்டுரையில் நற்றிணை பாடல் ,மகா கவி  பாரதியார் வைர வரிகளுடன் மிகச் சிறப்பாக மேற்கோள் காட்டி உள்ளார்கள் .

பெரிய புராணம் பற்றிய ஆய்வுக்
கட்டுரை மிக நன்று .பாரதியார் கவிதைகளில் மனித நேயம் மிக நல்ல ஆய்வு .மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் .தமிழ் இலக்கியங்கள் என்ற மலர்களில் இருந்து தேன்
எடுத்து இலக்கியத் தேன் விருந்து படைத்துள்ளார் .இலக்கிய சங்கமம் என்ற இந்த  நூல் .தமிழ் இலக்கியத்தின் சங்கீதமாக காதில் ஒலிக்கின்றது .

கர்னாடகத்தின்  இலக்கிய இணையர் முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி.இருவரும் இளம் வயதில்  ரகுநாத் என்ற மகனை இழந்த சோகத்தை மறக்க, இலக்கியத்தில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர் .


அன்புடன்

கருத்துகள்