மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் 15.1.2012 இன்று தன் முன்னேற்றப் பயிலரங்கமும் ,தமிழர் திருநாள் பொங்கல் விழாவும்
நடைப்பெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன்
வரவேற்றார். வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார்
,ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .திரு .பேனா
மனோகரன் D.S.P. (ஒய்வு )திரு .முத்துக் கிருஷ்ணன் , திரு.ராமமூர்த்தி,
வழக்குரைஞர் திரு .கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
.கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம், இரா. கணேசன் தன்னம்பிக்கை தலைப்பில்
கவிதை வாசித்தனர் .தொலைக் காட்சிப் புகழ் திருச்சி திரு .கமலா ராமநாதன் ஏணிப்படி
ஏன் ? இப்படி என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .மதுரை
தன்னம்பிக்கை வாசகர் வட்டதினர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக