மறையவில்லை முத்துக்குமார் இரா .இரவி
உடலால் உலகை விட்டு மறைந்த போதும்உணர்வாளர்களின் உள்ளத்தில் என்றும் வாழ்கிறாய்
மரண வாக்கு மூலத்தை இறபிற்கு முன்
மின்னஞ்சல் அனுப்பி அதிர்ச்சியில் ஆழ்த்தினாய்
உலகில் தற்கொலை செய்வது கோழைத்தனம்
உந்தன் தற்கொலையோ நல் வீரத்தின் இலக்கணம்
உடலுக்கு தீ மூட்டி பரவிய ஒளியில்
உணர்வினை எமக்கு புகட்டிய புத்தன்
உந்தன் கோரிக்கையை ஆள்வோர் ஏற்று இருந்தால்
ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து இருப்பார்கள்
சர்வதேச சமுதாயத்திற்கு படு கொலைகளை
கவன ஈர்ப்பு செய்த திருமகன்
ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் காக்க வேண்டி
ஒப்பற்ற உன் உயிர் மாயித்த மாவீரன்
ஈழத்தமிழர்கள் லட்சிய வரலாற்றில்
இனிய இடம் உனக்கு உறுதியாக உண்டு கொலைகாரன்களிடையே நடந்த தேர்தலில்
பெரிய கொலைகாரன் வெற்றி பெற்றான்
கொட்டு இல்லாமல் ஆடுவான் இனி
வெற்றிக் கொட்டு கிடைத்ததால் கூடுதலாக ஆடுவான்
ஆணவக்காரர்களின் ஆட்டம் நிரந்தரம் அன்று
ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை
இருள் மறைந்து ஒளி பிறக்கும் உறுதி
தனித்தமிழ் ஈழம் விரைவில் மலர்வதும் உறுதி
கருத்துகள்
கருத்துரையிடுக