மதுரை விரகனூர் வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைப்பெற்றது

மதுரை விரகனூர் வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைப்பெற்றது

மதுரை விரகனூர் வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைப்பெற்றது .தமிழ்த் துறை ஆசிரியர் வரவேற்றார் பள்ளியின் .முதல்வர் M. செல்வராணி தலைமை  வகித்தார் .தமிழாசிரியர் ,கவிஞர் மூவேந்திரன் அவர் எழுதிய கவிதையை தெம்மாங்குப் பாடலாகப் பாடினார் .
ஆசிரியர்களின் பயிற்சியின் காரணமாக  மாணவியரின் கிராமிய நடனம் மிகச் சிறப்பாக இருந்தது  .பாடல், மாறு வேடம் என கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது .கவிஞர் இரா .இரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு தமிழர் திருநாள் பொங்கல் பற்றியும், தன்னம்பிக்கை தொடர்பாகவும் உரையாற்றினார் .விழாவில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட  மாணவ மாணவியர் கலந்துக் கொண்டனர். பள்ளியின் சார்பாக ஆசிரியர்களும் ,மாணவ ,மாணவியர் பொங்கல் வைத்தனர் .மதுரை நரசிங்கம் சாலையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் நல அறகட்டளை நிர்வாகி P. பாண்டிச் செல்வியிடம், பள்ளியின் சார்பாக நலத் திட்ட உதவிகளை கவிஞர் இரா .இரவியும் ,பள்ளியின் முதல்வர் M.செல்வராணியும் வழங்கினார்கள் .பள்ளியின் துணை முதல்வரும் ,ஆசிரியர்களும் ,தமிழாசிரியர் ,கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடு செய்தனர் .

கருத்துகள்