காதலே ! கவிஞர் இரா .இரவி

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பிற்கான கவிதைகள் .

தலைப்பு  ----  
காதலே  !   கவிஞர் இரா .இரவி


கை
கூடியவர்களுக்கு
உன் அருமை புரியவில்லை
கை
கூடாதவர்களுக்கு
உன் பெருமை மறக்கவில்லை
------------------------------------------------------
திரைப்படத்தில் கை தட்டுவோம்
சொந்த வீட்டில் கை முறிப்போம்
-------------------------------------------------------
அன்றும்இன்றும்  என்றும்  
கவிஞர்களின் பாடுபொருள்
---------------------------------------------- -------
நிலவும் நீயும் ஒன்று
தூரத்தில் மிக அழகு
-----------------------------------------------
ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்
சகோதரி , மகள் வயப்பட்டால்
பிடிக்கவே பிடிக்காது .
-----------------------------------------------
சமந்தப்பட்ட்வர்களுக்கு மகிழ்ச்சி
சமந்தமில்லாதவர்களுக்கு இகழ்ச்சி
---------------------------------------------------
கண் இல்லை உண்மை
கண் இல்லாதவர்களும்
வயப்படுகிறார்கள்
----------------------------------------------------
வென்றால் வாழ்க்கை
தோற்றால் சுவடு
-------------------------------------------------



காதலே  !    என்ற தலைப்பில் நீங்களும் கவிதை அனுப்ப வேண்டிய முகவரி

ஆசிரியர்
பொதிகை மின்னல்
மின்னல் கலை
கூடம் 
117.எல்டாம்ஸ்  ரோடு
சென்னை .18
6000018

கருத்துகள்