கற்றறிந்த காக்கைகள் நூல் ஆசிரியர் கவிஞர் பேனா .மனோகரன்விமர்சனம் கவிஞர் இரா .இரவி

கற்றறிந்த காக்கைகள்

நூல் ஆசிரியர் கவிஞர் பேனா .மனோகரன்  ஒய்வு (D.S.P)  penamanoharan@gmail.com 
செல் 9443561895


விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்    விலை 35

 
காக்கை நாம் அடிக்கடி காணும் பறவை .கற்றறிந்த காக்கைகள்  என்ற நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் பேனா .மனோகரன் இலங்கையில் பிறந்து வளர்ந்த இந்தியக் குடிமகன் .காவல்துறையில் ,மதுரை தொடர் வண்டி நிலையத்தில் D.S.P யாகப்    பணியாற்றி ஒய்வு பெற்றவர் .

காக்கை சட்டை அணிந்து இருந்தபோது மனித நேயத்துடன் நடந்து கொண்ட சிறந்த மனிதர் .இவரது பணி  
ஒய்வு நாள் விழாவிற்கு சென்று இருந்தேன் .பலரும் பாராட்டினார்கள் .பெருக்கவிக்கோ வா .மு .சேது ராமன் ஒருமுறை மதுரையில் இருந்து அவசரமாக சென்னை செல்ல வேண்டும் என்று கேட்டார்கள் .உடன் நான் நூல் ஆசிரியர் பேனா .மனோகரன் அவர்களுக்கு தகவல் தந்தேன் .உடன் அவர் செல்ல ஏற்பாடு செய்து காவலர் உபசரிப்போடு அனுப்பி வைத்தார்கள் .தமிழ் பற்று மிக்கவர் .மகா கவி பாரதியை நேசிப்பவர் .இவர் பணியில் இருந்தபோது இலக்கியவாதிகள் சந்திக்க சென்றால் இன்முகத்தோடு வரவேற்றவர் .பதவிச் செருக்கு இல்லாமல் இருந்தவர் .

மரங்களையும் ,பறவைகளையும் நேசிப்பவர் .சிறந்த பண்பாளர் .காவல் துறையில் விதி விலக்கான மிக நல்ல மனிதர் .இவரது இரண்டாவது படைப்பு இந்த நூல் .மிகச் சிறந்த விமர்சகர்  தி .க .சிவசங்கரன் ,சிறந்த கவிஞர் கழனியூரன்  ஆகியோரின் அணிந்துரை அற்புத உரையாக உள்ளது. திரு .ரவீந்திர பாரதியின் வாழ்த்துரை முத்தாய்ப்பாக உள்ளது .

தனது கவிதைகளை
  பிரசுரம் செய்து அனைத்து இதழ்களுக்கும் மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார் .என்னை எழுத்தில் நிறுத்திய பால்ய சிநேகிதன் அன்பு ஜவர்கர்சாவிற்கு(அனுராதபுரம் ,இலங்கை ) என்று பிரசுரம் செய்து நண்பனுக்குக் காணிக்கை ஆக்கி உள்ளார் .       
இவரது தலைமையில் கவியரங்கில் நான் கவிதை பாடி உள்ளேன் .முத்தமிழ் அறக்கட்டளை விழா ,தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா ,கலை இலக்கியப் பெருமன்ற விழா என ,மதுரையில் நடக்கும் பெரும்பாலான இலக்கிய விழாக்களுக்கு தவறாமல் வந்து விடுவார் .இந்நூல் கவிதைகள் சில வற்றை அவர் மொழியிலேயே  கேட்டு இருக்கிறேன்  .

அற்றைத்திங்கள்

கான்கிரீட்
கூரைகளைக்
கட்டினார்கள் என்னவோ
வானத்தில் மழையும் இல்லை
கான்கிரீட் கூரைகளில் ஒழுக்கும் இல்லை
கவலைப் பட அம்மாவும் இல்லை !

உலகமயமானதால் மழையும் பொய்த்துவிட்டது .உணதமான உறவு அம்மாவும் இலை என்ற கவலையை கவிதையில் நன்கு 
பதிவு செய்துள்ளார் .

சுட்ட பழமும் சிறுகை அளாவிய
கூழும்

கொழந்த எச்சி(ல் )
கூடாதா அப்பா என்றால் அடடா
குறள்  தெறிக்கும் குரல்
நெஞ்சில் கனிகிறது
சுட்ட
பழமும்
 சிறுகை அளாவிய கூழும்

செல்ல மகள் வாங்கி வந்த இரண்டு  ஐஸ்
ல் எச்சில் படாததைத்  தா! என்று அப்பா சொன்னதும் மகள் சொல்லும் பதில் போன்ற கவிதை .நமக்கு அவ்வையின் சுட்ட பழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? என்ற வசனம் நம் நினைவிற்கு வருகின்றது ,     

அக்கினிக் கோளம் ஆகும் பூமி

காணாமல் போய்விட்டன காடுகள்
மணல் உறவுகள் மழிக்கப்
பட்டதால்
ஆறுகள்  அனைத்தும் அநாதைகளாய்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
குன்றுகள் எல்லாம் குவாரிகளாய்
நெல் விளைந்து கட்டடங்கள்
மல்லிகை மஞ்சள் பதியன்களை
மறைத்துவிட்டு இறால் பண்ணைகள்

இயற்கையை மனிதன் அழிக்க
அழிக்க இயற்கை மனிதனை அழிக்கும்  என்று எச்சரிக்கும் விதமாக கவிதை உள்ளது.  குவாரிகள்பெருகப் பெருக மனிதர்களுக்கு துன்பம் பெருகும் என்று கவிதையால் நினைப் படுத்துகின்றார். சுனாமி வந்ததற்கான காரணம் சொல்லும் கவிதை இது. பாராட்டுக்கள் .

சிறிய கவிதையின் மூலம் பல நிகழ்வுகளை நம் மனக்கண் முன் கொண்டு வது வெற்றிப் பெறுகின்றார் .


கீழ் வெண்மணியில் ஏர்வாடியில் தருமபுரியில்
கோத்ராவில் குடந்தையில் பானிபட்டில்
ஈழத்தில் ஈராக்கில் பூமிபந்தின்
எங்காவது ஒரு மூலையில்
நிகழ்ந்து கொண்டி
ருக்கிறது
மனித ஜீவிதம்
எரிதலும் உயி
ர்த்தலுமாய் !

வேம்பு
 

வீட்டின் முன்பாக வீரியம் காட்டி நிற்கிறது
வேதாள
ங்களால் வீழ்த்த முடியாத
வெப்ப மரம் .

வேம்பு  பற்றிய விளக்கம் வித்தியாசமாக உள்ளது .
வரதட்சணைக் கொடுமை பற்றியும் கவிதை எழுதி உள்ளார் .

சீதனச் சிறைகளில் சீதைகள்

பார்த்தவர்களால்
கூ
பேரங்கள்
  மட்டும்தான் பேசப்பட்டன
பாரங்கள் இன்னும்
பூர்த்தி செய்யப் படவே இல்லை .

இந்தக் கவிதையின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .பல திருமணங்கள்
பேரங்கள்  ஒத்து வராததால் பேச்சுவார்த்தை  முறிந்து விடுவதும் உண்டு.
காவல்துறையில் பணி புரிந்து ஒய்வுப் பெற்றவர் என்பதால் காவலையும் கடவுளையும் இணைத்து ஒரு கவிதை எழுதி உள்ளார் .

கடவுளும் காவலும்
இருப்பது போலிருக்கும் இருக்காது
இருக்காதது
போலிருக்கும் இருக்கும்

புதுக்கவிதைகளின் தொகுப்பு நூல் .மிக நல்ல கவிதைகள் .வாங்கிப் படித்து பயன் பெறுங்கள் .இலக்கியச் சுவை உணருங்கள் .
தொடர்ந்த பல கவிதை நூல்களை எழுத வேண்டும் என்று வேண்டி முடிக்கின்றேன் 

கருத்துகள்