மணிவாசகர் பதிப்பகம் பொன் விழா மலர். விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மணிவாசகர் பதிப்பகம் பொன் விழா மலர்

பதிப்பாசிரியர் ச .மெ.மீனாட்சி சோமசுந்தரம் ,
தொகுப்பாசிரியர் திரு .ச .இராமச்சந்திரன்

மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
  

 மணிவாசகர் பதிப்பகம் விலை 150

உலகப்பொதுமறையான  திருக்குறள் ,அவ்வையின் ஆத்திசூடி ,கொன்றை வேந்தன் ,நீதி நூல்கள்,  மகாகவி பாரதியார் கவிதைகள், புரட்சிக்  கவிஞர் பாரதி தாசன் கவிதைகள் .இப்படி தமிழின் பொக்கிசங்க
ளான நூல்களை மலிவுப்  பதிப்பாக ,மக்கள் பதிப்பாக வெளியிட்டு   ,ஏழை எளிய மக்கள் அனைவரிடமும் ,தமிழை சேர்த்தப் பெருமை ,வளர்த்தப் பெருமை மணிவாசகர் பதிப்பகதிற்கு உண்டு .சமரசத்திற்கு இடம் இன்றி கொண்ட  கொள்கையில் உறுதியுடன் இருந்து ,தரமான நூல்களை மட்டுமே பதிப்பித்து வரும் பதிப்பகத்தின் ,பொன் விழா மலர் இந்நூல் .

  தமிழ் மொழியை உயிர்ப்புடன் வைத்து இருக்கும் உன்னத பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகம்.தமிழ் ,தமிழ் இலக்கியம் தொடர்பாக இவர்களிடம் இல்லாத நூலே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .மெய்யப்பனார் அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு அளப்பரியது .புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன் மொழிக்கு ஏற்ப அவர் தம் புதல்வர் திரு . ச .மெ.மீனாட்சி சோமசுந்தரம்அவர்கள், தந்தையின் அடிச்சுவட்டில் வெற்றி நடை போட்டு வருகிறார்கள் .

இந்த பொன் விழா மலரில் 106 படைப்பாளிகளின் கவிதைகள் கட்டுரைகள் வாழ்த்துரைகள் உள்ளது .இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய மலர் .குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்தினர் மெய்யப்பனார் என்ற ஆளுமையை அறிந்து கொள்ள இந்த மலரை படிக்க வேண்டும் .

இந்த பொன் விழா மலர் தமிழ்ச் சொற்களின் களஞ்சியமாக உள்ளது .மணிவாசகர் பதிப்பகத்தின்  மெய்யப்பனார் பற்றி தவத்திரு ஊரன் அடிகளார் எழுதியுள்ள கருத்து மிகவும் நுட்பமானது .தொழில் கால், தொண்டு முக்கால் என்ற புது  மொழியை    நாம் இவருக்காகவே உண்டாக்கினோம் .
இந்த புது மொழியை இன்றைய பதிப்பாளர்கள் அனைவரும் கடைப்பிடிக்க முன் வர வேண்டும் .இந்த மலரில் பல பதிப்பாளர்கள் வாழ்த்துரை வலகி உள்ளார்கள் .

கவிஞர் சிற்பி
மலை என்றும்  வெயில் என்றும் பாராமல்
செருப்பு
கூட அணியாமல் நடந்து
சென்னைக்கும் சிற்றூர் பேரூர்களுக்கும் அலைந்து
மணிவாசகர் பதிப்பகத்தை வளர் பிறையாக்கி
முழுமதியாக்கி வளர்த்த காலம் .

மிகச் சிறந்த உழைப்பாளிக்கு ,சாகித்ய  அகதமி  விருது பெற்ற
கவிஞர் சிற்பி கவிதையால் புகழாரம் சூட்டி உள்ளார் .
தமிழறிஞர்  தமிழண்ணல்  பதிப்புச்  செம்மல் மெய்யப்பனார்  அவர்களின் பன்முக ஆற்றலை விளக்கி உள்ளார் .மிகச் சிறந்த வாசகர் ,சுவைஞர், எழுத்தாளர் ,பேச்சாளர் ,பதிப்பாளர் .தொழில் அதிபர் இப்படி பல்துறை வல்லுனராக எப்படி சிறந்தார் .என்பதை மிக அழகாக விளக்கி உள்ளார் .
நாட்டுடைமையாக்கம் பெற்ற நூல்களின் தாயகம் 
மணிவாசகர் பதிப்பகம் என்றால் தரம் சொல்லாமலே விளங்கும் அனைவருக்கும் .
பணம் வருகின்றது என்பதற்காக என்றைக்கும் தரமற்ற நூல்களை பதிப்பித்தது இல்லை .தரமான பதிப்பகம் என்ற பெயரை 50 ஆண்டுகளாக தக்க வைத்துள்ளனர் .


ஹைக்கூ கவிதைகள் எழுதி புகழ்ப்பெற்ற ஓவியக் கவிஞர் அமுத பாரதி அவர்களின் கவிதை சிறப்பாக உள்ளது .
மணிவாசகர் பெயர் மாண்புடன் பொருந்திய
அணி வாழ் பதிப்பகம் ஆள் போல் தழைக்கவும்.

மலரில் வண்ண புகைப்படங்களும் ,அரிய   
புகைப்படங்களும் கருத்தைக் கவரும் வண்ணம் உள்ளது .பல்வேறு தகவல்களும் நூலில் உள்ளது. படித்து விட்டு பாதுகாக்க வேண்டிய சிறந்த மலர் .அரிய பொக்கிசமாக மலர்ந்துள்ளது .பதிப்பாசிரியர் ச .மெ.மீனாட்சி சோமசுந்தரம், தொகுப்பாசிரியர் திரு .ச .இராமச்சந்திரன் இருவரின் கடின உழைப்பால் மலர் உருவாகி உள்ளது .பல்வேறு அறிஞர்கள் ,நீதி அரசர்கள் ,புலவர்கள், கவிஞர்கள் ,எழுத்தாளர்கள் ,கட்டுரையாளர்கள் ,பதிப்பாளர்கள் ,ஆய்வார்கள் அனைவருக்கும் மடல் அனுப்பி படைப்பை வாழ்த்தை வாங்கி தொகுத்து அற்பு  மலராக  வெளியிட்டுள்ளனர் .பாராட்டுக்கள் .பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் அவர்கள் பெற்ற விருதுகளின் பட்டியல் நூலில் உள்ளது .

மலரில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளே கவித்துவமாகவும் ,சித்திக்க வைக்கும் விதமாகவும் உள்ளது .எல்லாருக்கும் பெய்கின்ற இன்ப மாரி,என்றும்  மெய்யப்பர் பணி சிறக்கும் ,பதிப்பகம் அணி சிறக்க ,மெய்யப்பர்  நினைவுகள் ,அமரனாய் வாழ்வாய் என்றும் ,தழைத்தோங்கி  வாழ்க, வகுப்பறைகளைத் தாண்டி ,உழைப்பின் சிகரம் ,நினைவும் நிகழ்வும் ,அறிவைப்  பரப்பும் அரிய நிறுவனம் ,தமிழ் வளர்த்த சான்றோன் ,அறிவியல் தமிழ் உலகிலும் தழைக்கும் சுவடுகள்  இப்படி பல்வேறு தலைப்புகளில் அற்புதமான கட்டுரைகள் ,கவிதைகள் நூலில் உள்ளது .
  அரிய தமிழ் நூல்களை வெளியிடும் மணிவாசகர் பதிப்பகம் பணி பாராட்ட தக்கது .என்று அன்றே நூற்றாண்டு கண்ட இலக்கிய இமயம்
மு. வரதராசனார் பாராட்டி உள்ளார் .


தமிழ்த் தேனீ இரா .மோகன் ,பெயர் சொன்னால் போதும்  ,தரம் எளிதில் விளங்கும்  என ஊடகத்துறையில் வழங்கும் ஒரு வாசகம் உண்டு .அதற்கு   நூற்றுக்கு நூறு பொருந்தி வருபவர் மெய்யப்பனார்.என்று பாராட்டி உள்ளார் .

முனைவர் சாரதா நம்பி ஆரூரன் அவர்கள்
அய்யாவின் கலை வண்ணம் மேடையில் கண்டோம்
ஆச்சியின் கை வண்ணம் இலையிலே   
கண்டோம்
என்று எழுதி அம்மாவின் சமயழ்க் கலை சிறப்பையும் பாரடி உள்ளார்கள் .


தமிழோடு வாழ்வார் என்று வெள்ளையாம் பட்டு சுந்தரம் வாழ்த்தி உள்ளார்கள் .பதிப்புத் துறையில் உள்ள பலரும் மனம் திறந்து  பாராட்டி உள்ளனர் .
புலவர் கருணாநிதியின் மரபுக் கவிதை மிக நன்று .
விழி
த்திருந்து மெய்யப்பர் போல உழைத்தால்
விதிவானம் நம்வசந்தான் ஆகும் அன்றோ ?

மலரின் சிறப்பை எதை எழுதுவது எதை விடுவது என்றே தெரியவில்லை .அத்தனையும் அற்புதம் .பாராட்டுக்கள் படைப்பாளிகளுக்கும் , 
பதிப்பாசிரியர் ச .மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களுக்கும் ,தொகுப்பாசிரியர் திரு .ச .இராமச்சந்திரன் அவர்களுக்கும்.அட்டை முதல் அட்டை வரை அழகு .மெய்யப்பனாரின் பெயர்த்தி மருத்துவர் மீனாட்சி தாத்தா பற்றி எழுதியுள்ள கட்டுரையில்
 சாகவரம் பெற்றவர் .அவர் எழுத்துக்களின் மூலம் தமிழ் மொழி உள்ளவரை அவர் நம்முடன் இருப்பார் .
உண்மை முற்றிலும்  
உண்மை.பதிப்புச்செம்மல் மெய்யப்பனாருக்கு என்று மரணம் இல்லை என்பதை பொன் விழா மலர் சொல்கின்றது .

கருத்துகள்

  1. அன்பின் இரவி - அருமையான விமர்சனம் - எங்கு கிடைக்கிறது இந்நூல் ? வாழ்க வளமுடன் ! நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக