அமைதிக்கான நோபல் பரிசு தாருங்கள் கவிஞர் இரா .இரவி

அமைதிக்கான நோபல் பரிசு தாருங்கள்   கவிஞர் இரா .இரவி

கொலைவெறியைப் பாராட்டி விருந்துத் தந்த
கலை
க்காவலர் பாரதப் பிரதமர் !

இப்படி ஒரு பிரதமர்உலகம் முழுவதும் தேடினாலும்
எங்கும் கிடைக்காத ஒப்பற்ற பிரதமர் !

ஈழத் தமிழருக்காக மக்கள் திரண்டு
இரக்கக் குரல் கொடுத்தால் அமைதி ! 

தமிழக மீனவர்களைச் சுடுவதைத்
தடுக்கக் கூறினால்  அமைதி  !

விலைவாசி உயர்வை குறைக்க
வேண்டினால் மிகவும் அமைதி  !

கருப்புப்பண முதலைகளின் பட்டியல்
கேட்டால் அமைதியோ அமைதி !

கொடிய கூடங்குளம் அணு உலை மூடு

கொதித்து எழுந்து மக்கள் போராடினால்  அமைதி ! 

முல்லைப் பெரியாறு  அணையை

மூடர்கள் உடைப்போம் என்றால் அமைதி  !

புதிய அணை  கட்டவும்  என்று கேரளம்

புத்திக் 
கெட்டு உளறினால் அமைதி !

ஊழலுக்கு  எதிராக மக்கள் திரண்டு

உரக்க குரல் கொடுத்தால் அமைதி!

கூட்டணிக்  கட்சிகளின் மெகா

கூட்டு ஊழல்   அம்பலமானால்  அமைதி !

தன் கட்சிக் காரர்களின் இணையில்லா

தன்னிகரில்லா ஊழல் வெளியானால் அமைதி !

எத்தனை கோடி ஊழல் நடந்தாலும்

எல்லாவற்றிக்கும் அமைதியோ அமைதி !

பேசிக்கொல்வது ஒரு வகை

பேசாமல்
கொல்வது  மற்றொரு வகை !

இதில் எந்த? வகை   நமது

இந்தியப் பிரதமர் புரிந்திடுக !

அமைதிக்கான நோபல் பரிசை

அவசியம் எம் பிரதமருக்குத் தாருங்கள் !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்