திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி


முல்லைப் பெரியாறு ணை இன்னும்
ஆயிரம் வருடங்கள்
ஆயுள்   கொண்டது

அதிகம் படித்த மாநிலமாக இருந்தால் போதுமா ?
அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா ?

கேழ்வரகில் நெய் வடிகின்றது என்றால்
கேட்போரின் மதி எங்கே போனது ?

பென்னிகுக் என்ற மாமனிதனின் மூளையால்
பண்டைத்தமிழர் உழைப்பால் உருவானது

யார் அணையை யாரடா உடைப்பது ?
யார் உனக்கு அதிகாரம் தந்தது?

உச்ச நீதி மன்றம் சொன்னதை கேட்க மறுத்தால்
உச்சி மண்டையில் கொட்ட வேண்டி வரும்

ஆரஜக கேரளா அரசை கலைக்
வேண்டி வரும்
அன்பாக சொல்கிறோம் அறிந்து கொள் !

சபரி மலை வரும் தமிழர்களை தாக்குகின்றாய் !
பழனி மலை வரும் மலையாளிகளை மனதில் வை !

அணையின் நிலைத்த ஆயுளுக்காக வைத்த துளையில்
அங்கு வடியும்  நீரை கசிவு என்று பொய் உரைக்கிறாய் !
  
 

அணை எந்தக் காலமும் உடையாது உணர்ந்திடு !
அப்படியே உடைந்தாலும் மேல் நோக்கி பாயாது!

புதிய அணை கட்டும்  எண்ணத்தை அகற்றிவிடு !
பழைய அணையின் நீரின்  உயரத்தை   உயர்த்திவிடு !

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றாய் !
எறிந்த கல் திரும்பி வந்தால் என்னாகும் ?

மல்லாக்கப் படுத்துக்  கொண்டு  எச்சில் துப்புகின்றாய் !
துப்பிய எச்சில்உனக்கே திரும்பும் அறிந்திடு !

இடைத்தேர்தல் வெற்றிக்காக நாடகம் ஆடுகிறாய் !
என்பது இன்னும் புரியவில்லை கேரளா மலையாளிகளுக்கு

மிக மலிவான அரசியல் நடத்தும் மடையனே !
மிக விரைவில் திருந்திடு அல்லது திருத்தப்படுவாய்!

பொய்யை  திரும்பத் திரும்பசொன்னாலும் மெய்யன்று 
பொய் கெட்டிக்காரன் சொன்னாலும் எட்டு நாளைக்குதான்

பலமாக  உள்ள அணையை உடைக்க திட்டம் தீட்டி
பணம் கொள்ளை அடிக்க காணும் கனவு பலிக்காது

கேரளத்து அரசியல்வாதிகளின் சுய நலத்திற்கு
கேரளா மக்களே இரையாகி விடாதீர்கள்

அரிசி பருப்பு மாடு என உங்களுக்கு உண்பதற்கு
அனைத்தும் வழங்கிடும்  தமிழகத்திற்குத் துரோகம் செய்யாதீர் !

அன்று தமிழகத்தின் எல்லைகளை  இழந்தோம்
அன்று தானம் தந்த இடத்தி
ல் தமிழரைத் தாக்குகின்றனர் !

ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டிய  கதையாக
ஒண்டக் கொடுத்த இடத்தில தமிழரை அடிக்கின்றனர் 

தமிழன் ஏமாளியாக இருந்த காலம் மலை ஏறிவிட்டது
தமிழன் விழித்து விட்டான் மலையாளியே திருந்திவிடு

இழித்தவாயனாக  இருந்த காலம் முடிந்து விட்டது
இனி காரியவாதி ஆகிவிட்டது தமிழினம்

அணையை உடைக்கும் எண்ணத்தை கைவிடு
உடைக்க நினைத்தால்
உதை படுவாய் உறுதி !
  
பத்மனாப புர கோயில் நகைகள் யாவும்
பழைய தமிழக மன்னர்கள் வைத்தது

உடனடியாக நகைகள் அனைத்தையும்
உரிமையாளரான தமிழகத்திடம் தந்துவிடு !

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது
கேரளாவின் புதிய  அணை கட்டும் முயற்சி 

அன்னம் இட்ட கையை முறிக்க நினைக்கிறாய்!
திருப்பி அடித்தால் தாங்க மாட்டாய் !

எட்டு நாட்டு ராணுவத்தையே எதிர்த்தவன் தமிழன்
எங்கள் முன் நீயெல்லாம் சிறு தூசி ஊதி
டு வோம் !
 
பொறுத்தது  போதும் பொங்கி எழு !என்று
பொங்கி எழுந்து விட்டது எம் தமிழினம் !

அடங்கி விடு ஒடுங்கி விடு இல்லை என்றால்
அடக்கப் படுவாய் ஒடுக்கப் படுவாய் !

கொட்டக் கொட்டக் குனிந்த காலம் முடிந்தது
கொட்டும் கரம் முறிப்போம் நாங்கள் !

அண்டை நாட்டுக் காரன் கூட தண்ணீர் தரும்போது
அண்டை மாநிலத்தான் மறுக்கின்றான்

மத்திய அரசோ கேரளத்தை ஆளுவது தன் கட்சி என்பதால்
மவுனமாக  வேடிக்கை பார்க்கின்றது 

எச்சரிக்கை எச்சரிக்கை திருந்திவிடு !
திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !

கருத்துகள்