இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி
  
மகத்தான மகாத்மா பட்டத்தை
காந்தியடிகளுக்குத் தந்தவர் 
தாகூர்

கற்பனைக் கடலில் மூழ்கி
கவிதை முத்துக்களை எடுத்தவர்
தாகூர்
கதைகள் கேட்டு வளர்ந்தவர்
கீதாஞ்சலி    படைத்தவர்
தாகூர்

மாணவனாக இருந்தபோதே
மட்ட ற்ற கவிதை வடித்தவர்
தாகூர்


பகுத்தறிவு இன்பச்சோலை
மூட நம்பிக்கை பாலைவனம்  
தாகூர்

போரை வெறுத்த புத்தர்
பாடல் பாடிய சித்தர்
தாகூர்

அன்பின் சின்னம்
பண்பின் சிகரம்
தாகூர்

உலகம் சுற்றிய கவிஞர்
உலகம் போற்றும் கவிஞர்
தாகூர்

டயரின் கொடுமைக்கு 
சர் பட்டத்தை துறந்தவர்
தாகூர்

கவிதை கதை கட்டுரை நாடகம்
வடித்திட்ட வல்லவர்
தாகூர்

மரணத்திற்கு அஞ்சாதவர்
பணி முடிக்காமல்  துஞ்சாதவர்
தாகூர்இயற்கையின் இனிய நேசர்
இனிய கலைகளின் தாசர்
தாகூர்

எழுதியதோடு நில்லாமல்
ஏழைகளின் கண்ணீர் துடைத்தவர்
தாகூர்

உலகப் புகழ்க் கவிஞர்
ஒப்பற்றக் கவிக் கடல்  
தாகூர்

நோபல் நாயகன்
அன்றே உலக நாயகன்
தாகூர்


கருத்துகள்