அவர்தான் கலைவாணர்

அவர்தான் கலைவாணர்

நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன்
செல் 9842593924  cholanagarajan@gmail.com

தழல் பதிப்பகம் மதுரை .விலை 50

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மக்களை சிரிக்கவும் ,சிந்திக்கவும் வைத்த மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன்    வாழ்க்கை வரலாறு ,அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகள் ஆய்வு செய்து ,
தொகுத்து நூலாக வழங்கி உள்ளார்  நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன்.என் .எஸ் .கிருஷ்ணன் திரைப்படங்களில் பாடிய பாடல்களை மேடையில் பாடி  என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களின் புகழ் பரப்பி வருபவர் நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன்..அவரது நிகழ்ச்சியை கண்டு களித்து  உள்ளேன் .மிகச் சிறப்பாக  இருக்கும் .இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் காரணமாக என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய நூல்களை படித்து ,கேட்டு, 
அறிந்து ,ஆய்ந்து இந்த நூலை எழுதிஉள்ளார் .

அறிஞர் வ .ரா அவர்கள் .மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் பற்றி சொன்ன வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் .
பேராசிரியர் ,எழுத்தாளர் அருணன் அற்புத அணிந்துரையில்  தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார் .உண்மைதான் மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் தமிழகத்தின் சார்லி சாப்ளின்தான் .பொது வுடைமைவாதியான  நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் சிறுவனாக இருந்தபோதே என் .எஸ் .கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பகுத்தறிவுப் பாதைக்கு வந்ததாக குறிப்பிடுகிறார் .

காசிக்குப் போனா கரு உண்டாகும் என்ற
காலம் மாறிப்போச்சு ..
,
உடுமலை நாராயண கவியின் வைர வரிகளுக்கு உயிர் வழங்கியவர் என் .எஸ் .கிருஷ்ணன் என்ற தகவலையும் உடுமலை நாராயண கவி பற்றிய தகவலையும் நன்குப் பதிவு செய்துள்ளார் .என் .எஸ் .கிருஷ்ணன் அவர்கள் நடித்த  100 படங்களின் பெயரைப் பட்டியலிட்டு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார் .

 என் .எஸ் .கிருஷ்ணன் ஆரம்ப  காலத்தில் நாடக சபாக்களில் சோடா, கலர் விற்கும் வேலை பார்த்து கொண்டே ஒரே நேரத்தில் விற்பனையும் , நாடக நடிகருக்குகான பயிற்சியும் பெற்றுள்ளார் என்ற தகவல் நூலில் உள்ளது .
சிறந்த அவதானி செய்கு தம்பி பாவலர் என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களை நன்கு அவதானித்து தொலைநோக்குச்  சிந்தனையுடன்  அவர் அன்று சொல்லிய சொற்கள் அப்படியே நடந்தது அவர் வாழ்க்கையில் .

நம் நாஞ்சில் நாட்டு இளைஞன் கிருஷ்ணன் வருங்காலத்தில் மாமேதை ஆகப்  போகிறான் .இவனுடையல் புகழால் நம் நாஞ்சில் நாடு மட்டுமல்ல தமிழ்நாடே பெருமை அடையப் போகிறது .

தன்னுடைய முதல் படத்திலேயே வாதாடி ,போராடி ஒரு தனித்த உரிமையைப் பெற்றார் .என்ற தகவல் உள்பட பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .என் .எஸ் .கிருஷ்ணன்  அம்மையாரிடம்   காதலிக்கும் தனக்குபோது தனக்கு திருமணம்  ஆகவில்லை என்று பொய் சொல்லி விடுகிறார் .பின் நாளில் உண்மை தெரிந்து மதுரம் கேட்க ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் என்கிறார்கள் .நான் ஒரே ஒரு பொய்தானே சொன்னேன் என்று சொல்லி சமாளித்த தகவல் நூலில்  உள்ளது .

வீட்டிற்கு திருட வந்த திருடனை அடிக்காமல் சாப்பாடுப் போட்டு, திருடுவது குற்றம் உழைத்து சம்பாதிக்க வேண்டும் .தொழில் செய்து பிழைத்துக் கொள். என்று சொல்லி முதலாக வைத்துக் கொள் ! என்று பணமும் கொடுத்து அனுப்பிய கலைவாணரின் மனித நேயம் படித்து வியந்துப்போனேன்  .

வருமான வரி அதிகாரி இவர் நன்கொடை தருவது உண்மைதானா ?என்று சோதித்துப் பார்க்க மாறுவேடத்தில் ஏழையாக  வந்து  உதவி கேட்டபோது ,வந்தது வருமான வரி அதிகாரி என்று அறியாமல் உதவ முன் வந்த கலைவாணர் கொடை உள்ளம் கண்டு நெகிழ்ந்து ,
உனக்கு யாரைய்யா கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது ? உனக்கு கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்கணும்.என்றார் செய்திப் படித்து கலைவாணரின்  உதவும் பண்பை இன்றைக்கு கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் கடைப்பிடிக்க முன் வர வேண்டும் .மக்களிடம் இருந்துப் பெற்றப் பணத்தை மக்களுக்கே வழங்கியதால்தான் கலைவாணர் இன்றும் ,இறந்தபின்னும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் .

  கர கர கரவென சக்கரம் சுழல்
கரும்புகையோடு வருகிற ரயிலே !

அந்நியர்கள் நம்மை ஆண்டது அந்தக் காலம்
நம்மை நாமே ஆண்டு கொள்வது இந்தக் காலம்
மனுசனை மனுஷன் ஏய்ச்சுப் பொழச்சது
அந்தக்காலம் அது அந்தக்காலம்!

இப்படி பல்வேறு பாடல்கள் படிப்பவர்களுக்கு கலைவாணர் அவர்கள் பற்றிய  மலரும் நினைவுககளை மலர்வித்து 
நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் வெற்றிப் பெறுகின்றார். பாராட்டுக்கள்


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


கருத்துகள்