ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்

ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்

நூல்ஆசிரியர் ,பேராசிரியர் எ .எம் .ஜேம்ஸ் manithaneyajames@hotmail.com  செல் 9790128232

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பதிப்பகம் காவ்யா சென்னை. விலை 500

நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் மதுரை யாதவர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுப் பெற்று ,மனிதநேய மாத இதழ் நடத்தி வருபவர் .இதழில் எழுதி வந்த வள்ளுவர் முன்மொழிந்தார்   உலக அறிஞர்கள் வழிமொழிந்தார்கள். என்ற தொடர் கட்டுரையின் தொகுப்பு இந்நூல். உலகப் பொது மறையான திருக்குறளுக்கு மகுடம் சூட்டும் விதமாக நூல் வந்துள்ளது . உலக அறிஞர்ககள் யாவருக்கும் மூலவராக நமது திருவள்ளுவர் திகழ்ந்துள்ளார் .என்பதை உணர்த்தும் விதமாக இந்நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள் .

மொழி, நாடு ,சமயம் ,இனம் ,காலம் என்ற எல்லைகளைக் கடந்து திருவள்ளுவர் ,உலக மானுடத்திற்கு உவந்து உரிமைச் செல்வமாக வழங்கிச் சென்றுள்ள பரம்பரைச் சொத்துதான் திருக்குறள் .ஆங்கிலக் கட்டுரையாளர் திரு .ஜோசப் அடிசன் கருத்துடன் நூல் தொடங்குகின்றது .மதுரை ஆதீனம் ஆசியுரை மிகச் சிறப்பாக உள்ளது .மதுரைப் பேராயர் ,குன்றக்குடி  பொன்னம்பல அடிகளார் ஆகியோர் வாழ்த்துரை முத்தாய்ப்பாக உள்ளது.

திருக்குறள் நாள்தோறும்  நாம்  அசைபோட்டுச் சீரணிக்க வேண்டிய நூல் என்று நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் உண்மைதான் நம் வாழ்க்கைச் சிறக்க வழி காட்டுவது திருக்குறள் .கர்னல் முனைவர் க.திருவாசகம் ஆங்கிலத்தில் மிக நன்றாக அணிந்துரை வழங்கி உள்ளார் .தமிழறிஞர் தமிண்ணல் ,கவிவேந்தர் கா .வேழவேந்தன்   தமிழ்த்தேனீ இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது. நூலிற்கு வளம் சேர்ப்பதாக  உள்ளது .  

காவ்யா சண்முக சுந்தரம் அவர்களின் பதிப்புரை மனதில் பதியும் உரையாக உள்ளது .நூலில் முதலில் திருக்குறள் அடுத்து மிக எளிய தெளிவுரை அடுத்து உலக அறிஞர்கள் அந்த திருக்குறளுக்கு பொருத்தமாக சொன்ன கருத்து ஆங்கிலத்தில் ,அடுத்து அதன் மொழி பெயர்ப்பு தமிழிலும் மிக சிறப்பாக எழுதி உள்ளார் .நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் .

நூல்  ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .பல்வேறு மலர்களில் இருந்து  தேனீ  தேன் எடுப்பது போல பல்வேறு நூல்களில் இருந்து திருக்குறள் தொடர்பான கருத்தை சேகரித்து அதனை அதற்க்கு பொருத்தமான திருக்குறளோடு பொருத்தி மிகப்பெரிய ஆய்வு நடத்தி உள்ளார் .
பல்வேறு அறிஞர்களின் கருத்தை படித்து தெளிந்து திருக்குறளோடு ஒத்து வரும் கருத்தை தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் .மேல் நாட்டு அறிஞர்கள் சேக்க்ஷ்பியர் ,போப் ,மில்டன் ,வால்டர் ,ஜான்ஜெய்  ,ஜியோ ,மேக்டோனால்டு , தாம்சன் ,ஹீல்ஸ் ,இராபர்ட்சென் ,ஜெரேமை  டெய்லர்,  பெளரிங் ,ஷ்டிரட்ஸ்   ,டேனியல் வெப்ஷ்டர் ,டுபின் ,ரோஜர்ஸ் ,சீசரோ   ,சேரன் ,அடிசன் ,பென், ஜனாதன் எட்வர்ட்ஸ் ,ஜியார்ஸ்  எலைட்,சுவீடன் பர்க் இப்படி 224 அறிஞர்களின் கருத்தை மேற்கோளாகக் காட்டி உள்ளார் .

நம் நாட்டில் வாழ்ந்த அறிஞர்கள் கவியரசர் இரவீந்திர நாத் தாகூர் ,அன்னை தெரசா ,சுவாமி சித்பவானந்தா கருத்துகளும் இந்நூலில் உள்ளது. ஒவ்வொரு நூலைப் படிக்கும் போதும் திருக்குறளை ஒட்டிய கருத்து எங்கு ? உள்ளது என்று தேடிக் கண்டுப்  பிடித்து அதற்க்கு பொருத்தமான திருக்குறளோடு பொருத்திக் காட்டி உள்ளார் .நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் அவர்களுக்கு தமிழ் ,ஆங்கிலம் இரண்டு மொழியிலும் நல்ல புலமை இருப்பதால் ,மகாகவி பாரதியாரின் கருத்துப்படி தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வண்ணம் நூலை  வடித்து உள்ளார் . 

அறிஞர்களின் அறிஞர் திருவள்ளுவர் ,உலக நூல்களின் சிகரம் திருக்குறள் .என்று ஆய்வின் மூலம் ஆணித்தரமாக நிருபித்து உள்ளார் .நூல் ஆசிரியர் .இந்த நூலை மைய அரசுக்கு அவசியம் அனுப்பி வைக்க வேண்டும் .உலகப் பொது மறையான திருக்குறளை இன்னும் தேசியநூலாக அறிவிப்பதற்கு தயங்குவதன் காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது .இந்நூலை பார்த்து விட்டாவது திருக்குறளை தேசியநூலாக அறிவிக்க வேண்டும் .

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கண்
நீர் பூசல் தரும்.

புகழ்ப்பெற்ற இந்த  திருக்குறளுக்கு நோபல் நாயகன் ,மிகச் சிறந்த கவிஞர் ,ஓவியர், கவியரசர் தா
கூரின்  உயந்த கருத்தை பொருத்தி உள்ளார் .
நாம் அன்பு செலுத்துபவர் யாராயினும் ,அவரில் நமது சொந்த ஆன்மா மிக ,மிக உச்சமான உயர்ந்த அன்பு உணர்வுடன் ஒன்றி இருப்பதைக் காண்கிறோம் .
தாகூரின் கருத்தை மிக எளிதாக நுட்பமாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார் .நூல்ஆசிரியர் பேராசிரியர் எ .எம் .ஜேம்ஸ் ஏற்கனேவே தாகூரின்  கீதாஞ்சலியை தமிழில் மொழி பெயர்த்தவர் .

நன்றி மறப்பது நன்றன்று நன்ற
ல்லது
அன்றே மறப்பது நன்று
.

மிகப் பிரபலமான இந்த திருக்குறளுக்கு சரண் என்ற அறிஞரின் கருத்தை இணைத்துள்ளார் .
ஒருவரிட
மிருந்து  ஒரு உதவியைப் பெற்றவன் அதை எப்போதும் மறக்கக் கூடாது .உதவியை வழங்கியவன் அதை நினைவில் வைக்கக் கூடாது .

நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னாவாம் இன்னா செயின்  .

என்ற இந்த திருக்குறளுக்கு ரோஜாஸ் என்ற அறிஞரின் கருத்தை ஒப்பிட்டு உள்ளார் .
நாம் எதிரி என்று சந்தேகப் படாமலிருக்கும் நபர்தான் மிக மிக ஆபத்தான எதிரி .
முனைவர் பட்ட ஆய்வாளர்களை விஞ்சும்  வண்ணம் மிகப் பெரிய ஆய்வு செய்து நூலை படைத்துள்ளார் .இவருக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி பாராட்ட வேண்டும் என்பது என் விருப்பம் .நூல் ஆசிரியர் இது வரை எழுதிய நூல்களில் மிகச் சிறந்த நூலாக இந்த நூல் வ
ந்துள்ளது   .பாராட்டுக்கள் .    

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்