நானும் அவளும் கவிஞர் இரா .இரவி

நானும் அவளும்           கவிஞர் இரா .இரவி

ஊர்வன பறப்பன அனைத்தும் உண்பவன் நான்
ஊருகாய் காய் மட்டுமே அசைவம் உன்னாதவள் அவள்

கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவன் நான்
கல் கண்ட இடமெல்லாம் விழுந்து வணங்குபவள் அவள்

தொலைக்காட்சித் தொடர்களை வெறுப்பவன் நான்
தொலைக்காட்சித் தொடர்களை விரும்புபவள் அவள்

தமிழ் இல்லாத கர்னாடக இசை விரும்பாதவன் நான்
 தமிழ் இல்லாத கர்னாடக இசை விரும்புபவள் அவள்

இரவு நேரத்தில் வெளிச்சம் வேண்டாம் என்பவன்   நான்
இரவு நேரத்தில் வெளிச்சம் வேண்டும் என்பவள் அவள்

இலக்கியத்தை விரும்பி கரும்பென ருசிப்பவன் நான்
இலக்கியத்தை எனக்கு எதற்கு ?என்பவள் அவள்

ஆலயச் சுற்றுலா அறவே பிடிக்காத  நான் 
ஆலயச் சுற்றுலா அடிக்கடி  பிடிக்கும் அவள்

இயற்கைச் சுற்றுலா மிகவும் பிடிக்கும் நான் 
இயற்கைச் சுற்றுலா பிடிக்கவேப்  பிடிக்காத அவள்

எங்களுக்குள் பத்துப் பொருத்தம் இருப்பதாகச் சொன்ன
எங்கள் ஊர்   சோதிடன் எங்கு தேடியும் கிடைக்க வில்லை

வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா மட்டுமல்ல
வஞ்சி அவளும் நானும் தான்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்