ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                   கவிஞர் இரா .இரவி

ஆட்டத்தை விஞ்சியது
சூதாட்டம் 
கிரிக்கெட்
தொட்டால் மட்டுமல்ல
கேட்டாலும் அபாயம்
மின் கட்டணம்

வழியனுப்ப வந்தவர் மனமும்
பயணப்பட்டது
சென்றவருடன்

கைச்சுமையை விட
மனச் சுமையே   அதிகம்
ஏழைகள்

அனைத்தும்
உண்மை  இல்லை
விளம்பரங்கள்

எங்கும் எதிலும்
தமிழகம் முழுவதும்
மின் தடை

மோசமான
மதம்
தாமதம்

கோடிகளை விட
உயர்ந்தது
குழந்தையின் சிரிப்பு

அணிந்தே இருங்கள்
மதிப்பற்ற அணிகலன்
புன்னகை

கொள்ளை அழகு
கொட்டிக் கிடக்குது
அந்தி வானம்

 

விழிகளில் விழுந்து
மூளையில் நிலைத்தவள்
காதலி 

மறக்க நினைத்தாலும்
முடிவதில்லை
காதல் நினைவுகள்

சங்க  காலம்  முதல்
இன்றுவரை தொடர்வது
பூச் சூடுதல்

விலை உயர உயர
வந்தது வெறுப்பு 
தங்கம்

அரிது அரிது
சாமியாரில்
நல்லவர் --
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


கருத்துகள்