ஹைக்கூ நாற்பது
நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இனியவை நாற்பது இன்னா நாற்பது படித்து இருக்கிறோம் .ஹைக்கூ நாற்பது நூலின் பெயரே புதுமையாக உள்ளது .கையடக்கப் பதிப்பாக வந்துள்ளது .சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம் .பேருந்தில் பயணிக்கும்போது படித்துக் கொள்ளலாம் .இந்நூல் என் வாழ்க்கைத் துணைவி லட்சுமிக்கு என்று பிரசுரம் செய்து மனிவியின் நேசத்தைப் பறை சாற்றி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற ஹைக்கூ இலக்கணப்படி சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்து உள்ளார் .பொருத்தமான ஓவியங்கள் வசிபதர்க்கு சுவை கூட்டுகின்றன.
.
நிரம்பிய குளம்
நீர் பருகும் பறவை
கல்லெறியும் மனிதன்
நீர் பருகும் பறவையை விரட்டும் விதமாக கல் எறிந்துப் பார்க்கும் மனிதனின் விலங்கு குணத்தை காட்சிப் படுத்தி வெற்றிப் பெறு கின்றார்.
நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா .
உள்ளிருப்புப் போராட்டம்
கொத்தும் பறவைகள்
கண்ணாடிக் கதவை
கண்ணாடி என்பது அறியாது கொத்திப் பார்க்கும் பறவைகளைக் காட்சிப் படுத்துகின்றார் .இயற்கையைப் பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என்று பறை சாற்றும் விதமாக பல ஹைக்கூ கவிதைகள் நூலில் உள்ளது .
சமையலறைப் பாத்திரங்களுக்கிடையே
ஒளிந்துக் கொண்டிருக்கிறது
எனக்கானப் பசி
எல்லோரையும் பசியாற்றும் இல்லத்தரசிகள் சாப்பிட்டார்களா ? என்று யாரும் கேட்பதில்லை .பசியை மறைத்து வைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பசி போக்க சமைத்து வைக்கின்றனர் .பெண் அல்ல ஆண் என்று நினைத்தால் உணவு சமைக்கும் சமையல் காரர் பசியில் வாடுவதை காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .
கோடைக் காலம்
வெயிலில் கருகும்
இலையின் முகம்
கோடைக் காலத்தில் மனிதர்கள் முகம் மட்டுமல்ல இலைகளின் முகம் வாடுகின்றது .என்பதை உணர்த்துகின்றார் .
மழை நீரில் நனைந்தபடி
கவிஞர் வீடு திரும்பல்
கையில் குடை
கவிஞருக்கு கவிதை குறித்த சிந்தனை காரணமாக கையில் குடை இருப்பதையே மறந்து மலையில் நனைந்து வருகிறார் .அல்லது மழையில் நனைய வேண்டும் என்ற ஆசையுடன் கையில் உள்ள குடையை விரித்துப் பிடிக்காமல் நனைந்து வருகிறார்.குடை பிடிப்பது மழைக்கான கறுப்புக் கொடி என்று நினைத்து குடையை விரித்துப் பிடிக்காமல் நனைந்து வருகிறார்.இப்படி ஒரே ஒரு ஹைக்கூ படுக்கும் வாசகர் மனதில் பல்வேறு சிந்தனைகளை உருவாக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டு இந்த ஹைக்கூ .
நீண்ட மணற் பரப்பு
காற்றுக் கடத்தும் மணலை
ஆறு இருந்த இடம்
ஆறு இருந்த இடத்தில அன்று மணல் இருந்தது தண்ணீர் இல்லை .என்று வருத்தப்பட்டுள்ளார் .ஆனால் இன்று ஆறுகளில் தண்ணீரும் இல்லை. மணல்களும் இல்லை .மணல்களை அரசியல்வாதிகள் கொள்ளை அடித்து வருகின்றனர் .
குளிர்ந்த நிலா
மழையில் நனைகிறது
நிரம்பிய குளம்
நிலா ,குளம் இவற்றை ஹைக்கூ கவிஞர்கள் விடுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் ,ஒவ்வொரு கவிஞர்களும் ஒவ்வொரு விதமாக நிலவையும் ,குளத்தையும் பார்க்கின்றார்கள் என்பதே உண்மை .ஹைக்கூ நாற்பது வடித்த நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா அவர்களுக்கு பாராட்டுக்கள் .

கருத்துகள்
கருத்துரையிடுக