பாலை
இயக்கம் ம .செந்தமிழன்
தயாரிப்பு தி .இரவி
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
செம்மை தயாரிப்பின் செம்மையான தயாரிப்பு .தமிழராகப் பிறந்ததற்காக ஒவ்வொரு தமிழன் பெருமை கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் உன்னதப் படைப்பு . தேசிய விருது வழங்குபவர்களுக்கு மனசாட்சி இருந்தால் ,தேசிய விருதுகள் இந்தப் படத்திற்கு உறுதியாக வழங்கப் பட வேண்டும் . 2000 ஆண்டுகளுக்கு முன்பாக படம் பார்பவர்களை இழுத்துச் சென்று வெற்றி பெறுகின்றார் இயக்குனர் ம .செந்தமிழன்.அவரது பெயருக்கு ஏற்றபடி செந்தமிழரின் வாழ்வியலை ,வாழ்க்கையை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .பாராட்டுக்கள் .இதுப் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாது .மக்களின் ரசனை மலிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் .மசாலாப் படங்களுக்கு தரும் முக்கியதுவத்தை கலைப் படங்களுக்கு தருவது இல்லை .ஆறிவார்ந்த மக்களாவது அவசியம் பார்த்து படத்தை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் .குறிப்பாக தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய மிக நல்ல படம் .
வந்தேறிகளால் விரட்டப்பட்டு சொந்த மண்ணை இழந்து அகதியான தமிழ் இனத்தின் வரலாற்றை விளக்கும் படம் .இதில் நடித்த அனைவரும் யாருமே நடிக்க வில்லை அந்தப் பாத்திரங்களில் பாத்திரமாகவே வாழ்ந்து உள்ளனர் .நம் கண் முன்னே காட்சி படுத்தி படம் முடிந்து வெளியே வந்த பிறகும் படத்தை மறக்க முடிய வில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி .வசனம் மிக நன்றாக உள்ளது .இன்றைய தமிழ்த் திரை படங்களில் வருவதுப் போல தமிழ்க் கொலை இன்றி நல்ல தமிழில் பேசுகிறார்கள் .வசன உச்சரிப்பு ஈழ த்தமிழரை நினைப் படுத்துவதால் ,ஈழப் போராட்டம் படத்தில் குறியீடாக உள்ளதை படம் பார்க்கும் அனைவரும் உணரமுடிகின்றது .ஈழத்தில் விடுதலைக்காகப் போராடிய மக்களை படம் முழுவதும் நினைவுப் படுத்தும் விதமாகவே உள்ளது .முதிய கிழவியின் வீரம் , இளம் பெண்ணின் வீரம் ,சிறுவர்களின் வீரம் படம் நன்கு உணர்த்துகின்றது .வந்தேறிகளுக்கு மனிதாபிமானம் இருப்பதில்லை அவர்களிடம் நேர்மை, உண்மை எடுபடாது .முதுவன் கூறுகின்றார் ..முல்லைக்கொடி என்ற சொல்லே இலங்கை முல்லைத தீவை முள்வேலியை நினைப் படுத்துவதாக உள்ளது .
சங்ககாலத்தில் படித்த குறிஞ்சி, முல்லை ,மருதம் ,நெய்தல், பாலை அய்ந்து வகை நிலம் பற்றிய பதிவு அருமை .பாலை என்றால் என்ன?முதுவன் விளக்கி கூறும் போது பஞ்சம் வந்து வாடி உன்ன உணவு இன்றி தாயிடம் கொடுக்கப் பால் இன்றி ,குடிக்க தண்ணீர் இன்றி தன் மகன் மண் தின்று, வயிறு வீங்கி இறந்த கொடுமை சொல்லும் போது வறுமையின் கொடுமையை உணர்த்துகின்றார் . பஞ்சத்தின் கொடுமையை அறிய முடிகின்றது .
சிங்கம் புலி இரண்டும் பற்றிய ஒப்பீடு வசங்கள் மிக நன்று .சிங்கம் வசதியாக வாழ்வது பசி தாங்காது.ஆனால் புலி பசி தாங்கும், பதுங்கும் ,பாயும் ,வீழ்த்தும் தனித்து இருந்தாலும் எதிரியை தாக்கும் ..
தலைவன் தலைவி விரும்புதல் ,சிரித்துப் பேசுதல் ,உடன்போக்கு செல்லுதல் கற்பு மணம் புரிதல்மற்றவர்கள் கையில் கிடைத்த மலர்களை கொடுத்து வாழ்த்துச் சொல்லுதல் .மழை வருமா ? என்று முன்கூ ட்டியே நாட்களில் வரும் என்று கணித்துச் சொல்லுதல் அதபடி மழை வருதல் தமிழனின் அறிவு நுட்பத்திற்கு சான்று .பல்வேறு நுட்பான வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தி, சங்க கால தமிழர் வாழ்வைக் காட்டி வெற்றிப் பெறுகின்றார் இயக்குனர்.
அன்று அப்படி வாழ்ந்த தமிழன் இன்று கொலைவெறிப் பாடலையும் , வாடி வாடி க்யுட் பொண்டாட்டி பாடலையும் ரசிக்கும் அளவிற்கு தாழ்ந்து விட்டான் என என்னும் போது மனம் வருந்துகின்றது .
வந்தேறிகள் சமாதானம் பேசப் போனவர்களில் ஒருவரை முதுகில் குத்திக் கொன்று விடுதல் ,ஒருவரைச் சிறைப் பிடித்தல் .சித்திரவதை செய்தல் .கண்ணில் அம்பு விடுதல் இப்படி ஒவ்வொரு காட்சிகளும் ஈழத்துக் கொடுமையை நினைவுப் படுத்துகின்றது .
வந்தேறிகள் யானை எரியும் கல்லைத் துண்டில் கட்டி எறிந்து ,பெண்கள் ,முதியவர்கள், குழந்தைகள் எனத் தாக்கும் காட்சி ஈழத்தில் மக்கள் மீது கொடு வீசிய சிங்கள ராணுவத்தை நினைவுப் படுத்தியது .வந்து விழுந்த கல்களை எடுத்து வைத்து துண்டில் வைத்து திருப்பி எறிந்து தாக்குவது .காட்டில் தேள்களை மறைத்து வைத்து வந்தேரிகளைத் தாக்குவது ஈழத்து கண்ணி வெடியை நினைப் படுத்தியது .
வந்தேறிகள் முல்லைக்கொடி மக்கள் தலைவனைத் தேடி அலைந்து கடைசி வரை பிடிக்க முடியவில்லை .படத்தில் இறுதியில் மக்கள் போராடி வந்தேறிகளை ஒழிக்கிறார்கள்.சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்கிறார்கள் .படித்தின் முடிவு போல ஈழத்தில் நம் சகோதரர்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஆசையாகும் .தமிழர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதமாக திரைப்படம் உள்ளது படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்
படத்தில் நடிப்பு ,வசனம், பாடல் ,பின்னணி இசை ,ஒளிப்பதிவு என அனைத்தும் மிக அருமை .
குத்துப் பாட்டு ,ஆபாசம் ,இரட்டை அர்த்த வசனம் ,நம்ப முடியாத காதில் பூ சுத்தும் கிராபிக் காட்சிகள் ,தமிங்கிலப் பாடல்கள் எனப் படம் எடுத்துப் பணம் சேர்த்து சமுதாயத்தை சீரழித்து வரும் நடிகர்கள் ,நடிகைகள் ,இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தை கட்டாயப் படுத்திப் பார்க்க வைத்து புத்திப் புகட்ட வேண்டும் .

கருத்துகள்
கருத்துரையிடுக