மகாகவி பாரதியார் 130 வது பிறந்த நாள் 11.12.2011

மகாகவி பாரதியார் 130 வது பிறந்த நாள்   11.12.2011

தமிழுக்கு வளம் சேர்த்தவன்
தமிழென என்றும் நிலைத்தவன்
மகாகவி

மூடநம்பிக்கைகளை
முற்றாக வெறுத்தவன்
 மகாகவி

தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு 
பூணூல் அணிவித்தப்  புனிதன்
மகாகவி

சாதி வேற்றுமைகளுக்கு
சாவு மணி அடித்தவன்
மகாகவி

அக்கிரகாரத்தில் பிறந்த
அதிசிய மாமனிதன்
 மகாகவி 


பாட்டால் கோட்டைக் கட்டி
பரங்கியரின் கொட்டம் அடக்கியவன்
 மகாகவி 

முறுக்கு மீசைக்காரன்
முத்தமிழுக்குச்
சொந்தக்காரன்  
 மகாகவி 

சரித்திரம்  படைத்த
சகலகலா வல்லவன்
 மகாகவி 

நூற்றாண்டு கடந்து வாழும்
கற்கண்டு
கவிதைக் குன்று
 மகாகவி 

பெண்கள் விடுதலைக்கு
வித்திட்ட முதல்ப் பாவலன்
 மகாகவி 

சேதுபதி பள்ளியில் பணியாற்றி
மதுரைக்குப்
புகழ் சேர்த்தவன்
மகாகவி 

வயிற்றை விட இதயத்தை
பெரிதாய் மதித்தவன்
மகாகவி 

சமரசம் செய்து கொள்ளாத
தன்மானச் சிங்கம் 
மகாகவி
 
உடலால் மறைந்தாலும் 
பாடலால் என்றும் வாழ்பவன்
மகாகவி 

கருத்துகள்