போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் ராஜபட்சே
கவிஞர் இரா இரவி
இந்த ஆண்டின் ஈடு இணையற்ற நகைச்சுவை இதுதான் .
மக்கள் பிடிக்க ஓடி வரும்போது திருடன் ஓடிக் கொண்டே அதோ திருடன் பிடிங்க
, அதோ திருடன் பிடிங்க என்று சொல்லிக் கொண்டே ஓடுவான். புதிதாகப்
பார்ப்பவர்களுக்கு திருடனை விரட்டிக் கொண்டு ஓடுவது போல தோன்றும்
அப்படியே திருடன் தப்பி விடுவான் .
இந்தக் கதைதான் நினைவிற்கு வந்தது .ஐ . நா.மன்றம் போர்க் குற்றவாளியான
ராஜபட்சேயை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் .விசாரணை ,அறிக்கை
என்ற பெயரில் நாட்களை நகர்த்தினால் மேல சொன்ன திருடன் கதை போல ராஜபட்சே
தப்பி விடுவான் .
ஐ நா.மன்றம் இந்த விசயத்தில் உருப்படியாக நடவடிக்கை எடுக்கா விட்டால்,
உலக அரங்கில் ஐ நா.மன்றம் தன மதிப்பை இழக்க நேரிடும்.
மனிதாபிமானமற்ற முறையில் தமிழர்களைக் கொன்று குவித்த கொடூரன் யோக்கியன்
போல நாளும் உலக வலம் வருவது வேதனையாக உள்ளது .
சேனல் 4 வரிசையாக ஒளிபரப்பிய காட்சிகளே போதும் .ராஜபட்சேயை தண்டிக்க
வேறு என்ன ? ஆதாரம் வேண்டும் .இன்னும் என்ன ? சாட்சி எதிர்
பார்க்கிறார்கள்.
திருடன் கையிலேயே சாவி கொடுத்த கதையாக போர்க்குற்றம் புரிந்த ராஜபட்சே
அரசிடமே விசாரணை செய்யச் சொல்வது முட்டாள் தனம்.
ராஜபட்சே உடனடியாக தண்டிக்கப் பட வேண்டும் .உலகத் தமிழர்கள் யாவரும்
எதிர்பார்க்கும் விஷயம் இதுதான்.
உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை .உலக நாடுகள் முழுவதும் தமிழர்களின்
பங்களிப்பு உள்ளது .எனவே தமிழர்களின் கருத்தை மதிக்காமல் அமெரிக்காவும் ஐ
.நா .மன்றமும் நடப்பது சரி இல்லை .இந்நிலை தொடர்ந்தால் உலக அளவில்
தமிழர்கள் யாவரும் அமெரிக்காவையும் ,
ஐ .நா .மன்றத்தையும் எதிர்க்க வேண்டிய நிலை வரும் என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும் .
மலேசியா ,சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் அமைச்சரவையில் முடிவு
எடுக்கும் அதிகாரத்தில் தமிழர்கள் பலர் உள்ளனர் .எனேவே மனிதாபிமான
அடிப்படையில் போர்க்குற்றவாளி ராஜபட்சேயை உடனடியாகத் தண்டிப்பதற்கு
நடவடிக்கை எடுக்கவேண்டும் .எடுக்கத் தவறினால் விளைவுகள் மிக மோசமாக
இருக்கும் .
உலக அளவில் பிரான்சில் ,கனடாவில் ,இங்கிலாந்தில் ,அமெரிக்காவில் பல
நாடுகளில் உலகத் தமிழர்கள் போர்க்குற்றவாளி ராஜபட்சே யை உடனடியாகத்
தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மிக அமைதியான முறையில்
வேண்டுகோள் விடுத்தது நினைவில் கொள்ள வேண்டும் .
ஐ .நா .மன்றம் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவதன் காரணமாக உலக
அரங்கில் தன் மதிப்பை இழந்து வருகின்றது .ராஜபட்சேயுடன் ரகசிய குட்டணி
வைத்துள்ளதோ ? என்று சந்தேகம் வருகின்றது .
உலகத் தமிழர்களின் கருத்தை அலட்சியம் செய்தால் அது மிகப் பெரிய விளைவுகளை
ஏற்படுத்தும் என எச்சரிக்க ஆசைப் படுகின்றேன் .
--

கருத்துகள்
கருத்துரையிடுக