மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்
பயிலரங்கம் நடைப்பெற்றது .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்
எ .எஸ்
.ராஜராஜன் வரவேற்றார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா
.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார். .ஒருங்கினைப்பாளார்
திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .மன நலம் சற்று குன்றிய தன்னம்பிக்கை
வளம் மி குந்த ஜோ .சம்பத் குமார் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது .ஆ
.முத்து கிருஷ்ணன் ,ஜி .ராம மூர்த்தி ,நீத்தி வாழ்த்துரை வழங்கினார்கள்
.கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,கே .விஸ்வநாதன் ,மதுரை ஆனந்தன்
,குருநாதன் ,குமுதம் ஆறுமுகம் ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதை
வாசித்தனர் .திருமதி பா .உஷா மகேஸ்வரி தாம்பத்தியமும் ஒரு
தன்னம்பிக்கையே என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார்
. குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ,புரிந்து கொண்டு
வாழ வேண்டிய அவசியத்தை விளக்கிக் கூறினார்கள் .ஜோதி மகாலிங்கம் வருகை
தந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கி நன்றி கூறினார் .மதுரை தன்னம்பிக்கை
வாசகர் வட்டத்தினர் பெருமளவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக