ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்
நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை
விமர்சனம் கவிஞர் இரா .இரவி
ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தவர் .கவிதை எழுதுவதோடு மற்ற கவிஞர்கள் போல நின்று விடாமல் கவிதையாக வல்ல்ந்து வருபவர் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை.முதல் கவிதை நூல் இது .இந்த கவிதை நூல்தான் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்து உள்ளது .இயக்குனர் இமயம் பாரதி ராஜா ,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது .
பரிசுப்பெற்ற கவிதைகள் பல் வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .ஆணாதிக்க திரைப்பட உலகில் நல்ல பல காதல் பாடல்கள் எழுதி தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் .பெண்ணுரிமைக் குரலாக ஒலித்துள்ளார் .
காதல் உணர்வுக் கவிதை ஊறுகாய் போல உள்ளது .சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் சோறுப் போல உள்ளது .பாராட்டுக்கள்
காதலின் சுவடுகள்
வலி பார்த்ததும் விழி பூத்ததும்
உயிர் போனதும் உடல் வாழ்வதும்
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !
சிறுமியாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்து போது குடும்பமே பதறியது திருமணமாகி சுயம் இழந்து தொலைந்த போது யாருமே தேடவில்லை என்ற ஒப்பீட்டுக் கவிதை மிக நன்று .
தொலைந்து போனேன் !
என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !
கவிதையில் கடைசி வரியில் முத்தாய்ப்பாக முடிப்பது தனிக் கலை .கவிஞர் தாமரைக்கு அந்தக் கலை நன்றாக வந்துள்ளது .
வாழ்க்கைப் பிரச்சனை !
அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல் !
கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?மாதவியா ?என்று கவிதைப் பட்டிமன்றம் நடத்தி அதில் கவிஞர் தாமரை சொல்லியுள்ள தீர்ப்பு மிக சிறப்பு .புதிய சிந்தனை .
நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற தீர்ப்பு இது .இதோ !
அமைதியாய்க் கேட்ட நடுவர்
அழுத்தமாய்ச் சொனார்
தீர்ப்பு ...
சந்தேகமே இல்லை
இருவருமே கற்பில்
சிறந்தவர்கள்தாம் ..
கற்பிழ ந்தவன் கோவலனே !
கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற கருத்தை வழி மொழிவது போலகவிதை உள்ளது .கற்பு என்ற சொல்லே ஆணாதிக்க வாதிகளால் கற்பிக்கப் பட்டக் கற்பனைச் சொல் .என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சொல்லே பொருத்தம் .
தேநீர் விருந்து கவிதையில் சுத்தம் செய்யும் தொழிலாளியின் சிரமத்தை ,ஏழ்மையை கவிதையில் காட்சிப் படுத்தி உள்ளார் .
ஒட்டடை
யார் அடிப்பது
மனசின் ஒட்டடை ?
கவிதையின் கடைசி வரியின் மூலம் மனிதர்களின் மன அழுக்கைப் படம் பிடித்துக் காட்டு கின்றார் .
நரை என்பது எல்லோருக்கும் வரக் கூடிய பிரச்னை .அதனை எள்ளல் சுவையுடன் கவிதையில் உணர்த்துகின்றார் .
முதல் நரை
அந்த முதல் நரைக்கு அஞ்சி
மொட்டையடித்துக் கொண்டேன் .
ஆனால் இன்று பலரும் மொட்டை அடிப்பதில்லை கருப்ப்பு வண்ணம் பூசி இளமையாகக் காட்சி தருகின்றனர் .
மயிலிறகைக் காணவில்லை கவிதையில் குழந்தையின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் .
தமிழீழம் மலர்ந்ததின்று
தமிழீழம் மலர்ந்ததின்று
கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .
கவிஞரின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் .ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .
தீலிபா!
உயிருக்கு நீ தந்த மரியாதை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால் !
இந்தக் கவிதையின் மூலம் உண்ணா விரதம் இருந்தே உயிர் துறந்த தீலிபனைக் காட்சிப் படுத்தி உள்ளார் .இன்று அரசியல்வாதிகள் உண்ணா விரதத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர் .
நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய சொற்களை வைத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு கவிதை .
எதிர்வினை !
கொலையும் செய்வாள்
பத்தினி
கொஞ்சம் இரு
முன்னதாக
நீ என்ன செய்தாய் ?
கவிஞர் தாமரை கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுங்கள் .என்ற என் வாழ்த்தை எழுதி முடிக்கின்றேன்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
http://en.netlog.com/ rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

http://eluthu.com/user/index.
http://en.netlog.com/
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
வித்தியாசமான போராளி தாமரை
பதிலளிநீக்கு