மயக்கம் என்ன
இயக்கம் செல்வராகவன்
நடிப்பு தனுஷ்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
செல்வராகவன் படம் என்றால் இனிமேல் யோசித்துப் பார்த்து ,முடிவு கேட்டு விட்டுதான் செல்வேண்டும் .இடைவேளைக்குப் பின்பு திரைஅரங்கில் அமர்ந்து இருப்பதே பெரிய சோதனை ஆகிவிட்டது .செல்வராகவன் மனம் போன போக்கில் திரைக்கதை அமைத்து உள்ளார் .குறிப்பாக நமது தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலருக்கு மன நோயாளிகள் கதையை பெரிதுப் படுத்தி சமுதாயத்தில் மன நோயாளிகளை உருவாக்குவதே நோக்கமாகக் கொண்டு படம் எடுத்து வருகின்றனர் .
நடிகர் தனுஷ் பக்கத்துவீட்டுப் பையனை ப் போல இருப்பதாலும் ,ஒல்லியான உடம்பை வைத்துக் கொண்டு நன்றாக சண்டை போடுவதாலும் பலரும் ரசித்தனர்.அண்ணன் செல்வராகவன் தம்பி தனுஷை வீணடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும் .படத்தில் சண்டைக் காட்சி எதுவும் இல்லை. தனுஷ்எடுத்த பறவை .புகைப்படத்தை தான் எடுத்த புகைப் படம் என்று ஏமாற்றி விருது பெரும் வில்லனை படம் பார்க்கும் நமக்கே அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் கதாநாயகன் தனுஷ் அடிக்க மாட்டார் .
படம் முழுவதும் தண்ணி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் .நண்பனின் தந்தை மகனுக்கும் மகனின் நண்பர்களுக்கும் தண்ணி ஊற்றி ஊற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.நல்ல பண்பாடு வளர்க்கும் திரைப்படம் .குடியை மறந்த குடிகாரகள் படம் முடித்தவுடன் நேராக டாஸ்மாக் சென்று விடுவார்கள். ஏற்கெனவே சமுதாயம் சீரழிந்து வருகின்றது .இது போன்ற படங்கள் சமுதாயத்தை இன்னும் சீரழிக்கும் .அப்படி ஒரு திரைக்கதை இந்தப்படம் .தனுஷ் நண்பன் என் காதலி என்று நண்பன் அறிமுகம் செய்து வைக்கிறான் அவளோ டேடிங் என்று சொல்லிவிட்டு ,அவனை விட்டு விட்டு நண்பனைதனுஷை காதலிக்கிறாள். கட்டிப் பிடிக்கிறார்கள் .நண்பன் பார்த்து விட்டு குமுறுகிறான் .அரை மனதுடன் அவர்களுக்கே திருமணம் செய்து வைக்கின்றனர் .
தனுஷ் எடுத்த புகைப்படத்தை தான் எடுத்த புகைப்படம் என்று சொல்லி விருது பெற்ற வில்லனின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது .அதை பார்த்து விட்டு தொலைக்காட்சி பெட்டியைப் போட்டு உடைக்கிறார்.ஏன் ? என்று கேட்ட கர்ப்பிணி மனைவியை தள்ளி விட்டுக் கருவை சிதைக்கிறார்.தோழியின் திருமணதிற்கு சென்ற தனுஷ் தோழியின் கணவன் மாப்பிள்ளையை திருமணத்தன்றே பாட்டிலால் அடித்து மண்டையை உடைக்கிறார். இப்படி மன நோயாளி ஆனவர், பின் .மனைவி பத்திரிகைக்கு அனுப்பிய புகைப்படத்தின் காரணமாக .வன விலங்கு படப்பிடிப்பு வாய்ப்பு வந்து, உலக விருது பெறுகிறார் .கடைசி சுபம் எப்போது ? போடுவார்கள் .படம் எப்போது ?முடியும் என்று ஆவலோடு எதிர் பார்க்க வைத்து விட்டார் படம் பார்க்கும் போதே செல்வராகவன் என்ன ?ஆனதோ என்று எண்ணத் தோன்றுகிறது .
திரைப்படம் என்பது வலிமையான ஊடகம் அதனை மக்களுக்கு நாள் செய்திகள் சொல்லப் பயன் படுத்துங்கள் .சைக்கோ கதை எடுப்பதற்கு இனி தடை விதிக்க வேண்டும் .படத்தில் ஆறுதலான விஷயம் விளம்பரத்தில் வந்த ரிச்சா கதாநாயகி அழகாக இருக்கிறார் .நன்றாக நடித்து உள்ளார் . அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு .ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது .வன விலங்குக் காட்சிகளைப் பாராட்டலாம் .இசை சிறப்பாக உள்ளது.நடிகர் தனுஷ் அடிடா உதைடா என பாட்டு எழுதுவதையும் ,பாடுவதையும் நிறுத்தி விட்டு படத்தில் நடிப்பதை மட்டும் செய்வது நலம் .இனி வருங்காலங்களில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்காமல் இருப்பதும் நலம் .
--

கருத்துகள்
கருத்துரையிடுக