அன்பின் சின்னம் அன்னை தெரசா கவிஞர் இரா .இரவி

அன்பின் சின்னம் அன்னை தெரசா  கவிஞர் இரா .இரவி

கல்கத்தா வீதிகளில் விடுதிக்காக
கையேந்தி சென்றார் அன்னை

உமிழ்ந்தான் ஒரு வியாபாரி
உமிழ்ந்தது எனக்குப் போதும்

விடுதியில் உள்ள தொழு நோயாளிகளுக்கு
விரும்பியதைக் கொடு என்றார்

காலில் விழுந்து வணங்கினான்
கடையில்  இருந்து  உமிழ்ந்தவன்

இன்னா செய்தாரை திருக்குறள் வழி
இனிதே வாழ்ந்துக் காட்டிய அன்னை

நோபல் பரிசுக்கே நோபல் பரிசு தந்தவர்
நேயம் மிக்க தன்னலமற்றத்  தாய்

இறந்த பின்னும் வாழ்பவர்கள் மிகச் சிலர்
மிகச் சிலரிலும் சிகரமானவர் அன்னை

பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர்
பெண்மையின் மேன்மையை உணர்த்தியவர்

பிறருக்காகவே  வாழ்ந்திட்ட மாதா
பண்பால் சிறந்திட்ட பிதா

அயல் நாட்டில் பிறந்திட்ட போதும்
அனைவரின் உள்ளத்திலும் வாழ்பவர்

மனிதநேயம் கற்பித்த மனிதம்
மனிதருள் மாணிக்கமாக ஒளிர்ந்த புனிதம்

அன்பின் சின்னம் அன்னை தெரசா
பண்பின் சிகரம்  அன்னை தெரசா



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


கருத்துகள்