தெருவோரத்தில் யாரோ கவிதாயினி T.கார்த்திகா
மனம் என்பது
மனம் என்பது
சில கனவுகளையும், நினைவுகளையும்
சுமக்கின்ற...
சேமிப்புகிடங்குகள்!
இந்த கிடங்கில்
கண்ணீரை மட்டும்
நிரப்பியது யாரோ?
காயமான இடத்தில்
கல்லெறிந்ததும் யாரோ?
நினைவை பசியாக்கி
உணவை கனவாக்கி
உயிரோடு விளையாடுது
இந்த விதி!
நிலைஏதும் புரியாமல்
ஊமையானது மதி!
வாழ்க்கைப்பயணம்
வறுமை பாதையின் மேல்
புதிராய் தொடரப்போவதை
உணர்ந்துதானோ...
குப்பைத்தொட்டியிலிருந்து
கதறி அழுகிறது
கைக்குழந்தை!
பெயருக்குப்பின்னால்
பட்டத்தை எழுதலாம்.
பெயராககிப்போன
அநாதை பட்டத்தை
எழுதக்கூட கற்கவில்லை
பள்ளிசென்று!
உண்மையில் எங்கள் படைப்பு
இறைவன் செய்த பிழை!
கருத்துகள்
கருத்துரையிடுக