வள்ளலார் இராமலிங்க அடிகள்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


--

இராமலிங்க அடிகள்

குறுந்தொடுப்பு என்னது[காட்டு]
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமலிங்க அடிகள்
படிம மூலம்:TamilNation.org
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - ஜனவரி 23, 1873) ஓர் ஆன்மீகவாதி ஆவார்.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] பிறப்பு

இவர் சிதம்பரத்தில் இருந்து 10மைல் தொலைவிலுள்ள மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார்.இவருக்கு சபாபதி,பரசுராமன்,உண்ணாமுலை,சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்.இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார்.

[தொகு] சன்மார்க்க சிந்தனையாளர்

தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் வாழ்ந்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் (சமரச சமயம்) சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமசாலை அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.

[தொகு] வள்ளலாரின் கொள்கைகள்

1)கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
2)புலால் உணவு உண்ணக்கூடாது.
3)எந்த உயிரையும் கொலை செய்யகூடாது.
4)சாதி,மதம்,சமயம்,இனம்,மொழி முதலிய வேறுபாடு கூடாது.
5)இறந்தவர்களை எறிக்க கூடாது,சமாதி வைத்தல் வேண்டும்.
6)எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7)பசித்தவர்களுக்கு சாதி,மதம்,சமயம்,இனம்,மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
8)கருமகாரியம்,திதி முதலியவை செய்யக்கூடாது.
9)சிறு தெய்வ வழிபாடு செய்யகூடாது.அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
10)எல்லாஉயிர்களும் நமக்கு சகோதரர்களே,அவைகளுக்கு நாம் துன்பம் செய்யகூடாது.

[தொகு] பசியாற்றுவித்தல் அல்லது அன்னதானம்

மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெருகிறது. வடலூரில் தலைமை இடமாக இருந்தாலும், உலகமெங்கும் பசியாற்றுவித்தலை அவரது கொள்கையை பின்பற்றுகின்றவர்கள் செய்கிறார்கள்.

[தொகு] திருவருட்பா

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.இது ஆறு திருமுறைகளாக பகுக்கபட்டு உள்ளது.திருஅருட்பா முதலில் இராமலிங்கஅடிகலின் தலைமை சீடர் தொழுவூர் வேலாயுதனார் அவர்களால் நான்கு திருமுறைகள் வெளியிடபட்டது.பின்னர் ஐந்து மற்றும் ஆறாம் திருமுறைகள் வெளியிடபட்டது. இவரது உரைநடை, கடிதங்கள், யாவும் தொகுக்கப்பெற்றுத் தனி நூலாக முன்னாள் அறநிலையத்துறை ஆணையாலர் உயர்திரு பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார்.பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

http://audio.vallalar.org/
David face.png ஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
  • இப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2011, 14:31 மணிக்குத் திருத்தினோம்.
  • Text is available under the Creative Commons Attribution/Share-Alike License; additional terms may apply. See Terms

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

கருத்துகள்