வாகை சூட வா
திரைப்பட விமர்சனம்
கவிஞர் இரா .இரவி
இயக்கம் இயக்குனர் A.சற்குணம்.
நடிப்பு .விமல்
படத்தின் பெயரே கவித்துவமாக உள்ளது .களவாணி என்ற திரைப்படம் தந்த இயக்குனர் A.சற்குணம் இயக்கியுள்ள அற்புதமான படம் .கிராமத்தை கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் .இயக்குனர் A.சற்குணம்.
விமல் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .இறுதி காட்சியில் கண்ணீர் வர வைத்து விடுகிறார் .பழையக் காலத்தை மிக கவனமாகக் காட்சிப் படுத்தி உள்ளனர் .
கிராமத்தில் உள்ள கிராமிய உணவுகள் .மழையில் மரத்தில் ஏறும் மீன் .கள்ளிச் செடி ,சோற்றுக்கற்றாழை,பழையக் காலத்து வானொலி இப்படி தேடித் தேடி படம் பிடித்த ஒளிப்பதிவாளரும் பாராட்டுக்குரியவர்
அறிமுகம் ஆகி உள்ள கதாநாயகி நன்றாக நடித்து உள்ளார் .கிராமத்தைக் காட்ட இயக்குனர் இமயம் பாரதி ராஜா அளவிற்கு சிரமப்பட்டு இருப்பதை
உணரமுடிகின்றது .
இயக்குனர் பாக்யராஜ் தந்தையாக நடித்து உள்ளார் .பத்திர எழுத்தர் தன் மகனை தனியார் கிராம சேவகத்தின் சார்பில் ஆசிரியர் வேலைப்பார்த்து சான்றிதல் வாங்கினால் அரசாங்க ஆசிரியர் வேலைக்கு முன்னுரிமை தருவார்கள் என்று கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார் .விமல் கிராமத்திற்கு சென்று ஆசிரியர் வேலைப் பார்க்க மிகவும் சிரமப் படுகிறார் .படிக்க மாணவர்கள் வருவதில்லை .விமலைப் பார்த்தாலே ஓடி ஒளியும் மாணவர்கள் ஓடி ஒரு மாணவன் கிணற்றில் விழ அவனை காப்பாற்ற அவன் தாய் என் பிள்ளையை கொல்லப் பார்த்தாயே எனத் திட்ட,ஆடு முட்ட வருகிறது. கிராமத்தில் வாழும் ஒருவர் புதிர்க் கணக்குப் போட தெரியாமல் விமல் முழிக்க ஆசிரியருக்கு கணக்குத் தெரியவில்லை என்று ஊர் கேலி பேசுகின்றது. அப்பாவிற்கு கடிதம் எழுதி விடைக் கேட்டு சமாளிக்கும் விமல் .ஆண்டான் என்பவன் கிராம மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்வதை .பொய் கணக்குச் சொல்லி ஏமாற்றுவதை உணர்த்துகின்றார் விமல் .
கல்வியின் அவசியத்தை உணர்ந்து மக்கள் ஆசிரியர் விமலை விரும்பும்போது .அரசாங்க வேலைக்கான ஆணை வருகின்றது .விமலின் தந்தைக்கு மகனை அரசாங்க ஆசிரியர் ஆக்க வேண்டும் என்பது லட்சியம் .
கதை இன்றி சதையை நம்பி ,ஆபாசம் காட்டி அளவிற்கு அதிகமான வன்முறை வெட்டு குத்து காட்டிப் பணம் சேர்க்கும் இயக்குனர்களும் ,தயாரிப்பாளர்களும் இந்தப்படத்தைப் பார்த்து திருந்த வேண்டும் .நல்ல படைப்பு ,நல்ல கவிதை படித்த உணர்வைத் தந்தது .
திரைப்படம் பார்க்கிறோம் என்பதை மறந்து கண் முன் நிகழ்வைப் பார்க்கும் உணர்வு வருகின்றது .
இளம் இயக்குனர்கள் முதல் படத்தில் திறமை முழுவதும் காட்டி விடுவார்கள் .அடுத்தப் படத்தில் சரக்கு தீர்ந்து தோற்று விடுவார்கள் ,ஆனால் இயக்குனர் முந்தைய படமான களவாணியை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தை வழங்கி உள்ளார்.
படம் பார்ப்பவர்களைப் பின்னோக்கி சில ஆண்டுகளுக்கு முன்பாக கடத்திச் சென்று விடுகிறார் .இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல படம் . அன்றைய ஆசிரியர்கள் பட்ட துன்பத்தைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் .
திரைபடத்தில் எம் ஜி ஆரை நம்பியார் சவுக்கால் அடிபதைப் பார்த்து விட்டு குருவி சுடும் துப்பாக்கியால் வெண் திரையை சுடும் அளவிற்கு படிப்பறிவு இல்லது கிராமத்திற்கு படிப்பறிவு,பகுத்தறிவு போதிக்கும் நல்ல ஆசிரியாராக முத்திரை பதித்து உள்ளார் விமல் .
கவிஞர்கள் வைரமுத்து ,அறிவுமதி பாடல்கள் அர்த்தம் உள்ளவை .சிறப்பாக உள்ளது.படம் உயிரோட்டமாக உள்ளது .படத்தின் வெற்றிக்கு உழைத்த இயக்குனர் ,துணை இயக்குனர்களின் உழைப்பை உணரமுடிகின்றது .படம் பார்பவர்கள் இன்று நகரத்தில் வசித்தாலும் கிராமத்தில் வசித்த மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றார் இயக்குனர் .நடிகர் விமல் மிக இயல்பாக நடித்து படத்தின் வெற்றிக்கு உதவி உள்ளார் .
ஆசிரியர் விமலுக்கு தேநீர் வழங்கும்போதே என்னிடமே சாப்பாடு சாப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு மாதப் பணம் வாங்கி பின் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும் பாடல் வானொலியில் கேட்பதற்காக வானொலி இரவல் பெரும் மதியாக கதாநாயகி சிறப்பாக நடித்து உள்ளார் .கிராமத்து மாணவர்களாக வரும் சிறுவர்களும் நடிக்கவில்லை வாழ்ந்து உள்ளனர் .
பெயருக்கு ஏற்றப்படி வாகை சூடி உள்ளார் .மக்களும் இதுப் போன்ற தரமானத் திரைப்படங்களை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் .கடிசியில் இந்தப் படம் கோடிக்கணக்கான குழந்தைத் தொழிலாளிகளுக்கு சமர்ப்பணம் செய்து கல்வி பற்றிய விழிப்புணர்வு விதைத்துள்ள உள்ள பாராட்டுக்கள்
--

கருத்துகள்
கருத்துரையிடுக