வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வேலூர் மாவட்டம்                   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இயக்குனர் .A.S.P.மனோகர்

தயாரிப்பு .கல்பாத்தி அகோரம்

நேர்மையான காவல் அதிகாரிக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டம்தான்  வேலூர் மாவட்டம் திரைப்படம் கதாநாயகன் நந்தா சிறப்பாக நடித்து உள்ளார் .வித்தியாசமான கதை அமைப்பு .இயக்குனர் A.S.P.மனோகர் திறம்பட இயக்கி உள்ளார் .படத்தின் ஆரம்பத்தில் படத்தில் வரும் சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவது அல்ல கற்பனையே என்று வந்தாலே நடந்த சம்பவங்களின் தொகுப்புதான்   கதை என்று புரிந்து   கொள்ளலாம் .

சந்தானம் நகைச்சுவை படத்திற்கு பலம் சேர்க்கின்றது .நந்தாவின் பெயர் முத்துக்குமார் .விவசாயின் மகன் அப்பா மூட்டை துக்கி மகனைப் படிக்கவைத்து நான்பட்ட கஷ்டம் நீ படக்கூடாது .நீ படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று சொல்லி வளர்க்கின்றார் .டெல்லியில் காவல்துறை பயிற்சி பெற்று வேலூர் மாவட்டம் உதவி காவல் கண்காணிப்பாளராக  பணியில் சேருகிறார் .காதலித்து மனம் முடிக்கிறார் .டெல்லியை படம் பிடித்த ஒளிப்பதிவாளரை பாராட்டவேண்டும் .இசை ,பாடல் நன்று கவிஞர்கள் தாமரை முத்துக்குமார் பாடல்கள் நன்று.

      முத்துக்குமாருக்கு மேல் உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போகும்போது முத்துக்குமார் மட்டும்   பணிய மறுக்கிறார் .  அரசியல்வாதிகள் பலி வாங்குகிறார்கள் ,வழக்கமான மசாலாக் கதையை சற்று வித்தியாசமாக படமாக்கி உள்ளார் இயக்குனர்  A.S.P.மனோகர் .
     மந்திரிக்கு அடியாளாக இருந்து கொண்டு நிலம்   அபகரத்தில் கொலை செய்தல் என பல சமூக விரோத    செயல்  செய்கிறான் குருமூர்த்தி அவனை மந்திரி காப்பாற்ற முயல்கின்றார் .முடியாதபோது கொன்று விடுகிறார் .இறுதியில் மந்திரி எப்படி கைது ஆகிறார் என்பது நல்ல திரைகதை .
நேர்மையான காவல் அதிகாரி முத்துக்குமராக நந்தா மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரிகளை தமிழ் திரைப்படம் அதிகம் காட்டி உள்ளது . நேர்மையான காவல் அதிகாரியைக் காட்டிய சில படங்களின் வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும்.

     காவல் அதிகாரி அரசியல்வாதிகளைப் பார்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசுவதைப்  பார்த்து இருக்கிறோம் . ஆனால் இந்தப்படத்தில் காவல் அதிகாரி  அதிகம் பேசாமல் செயலில் இறங்குவது சிறப்பு .
விரல் விட்டு எண்ணக் கூடிய  ஒரு சில நேர்மையான காவல் அதிகாரிகளை நினைவூட்டும் விதமாக படம் உள்ளது .
தந்தையாக குமார் நன்றாக நடித்து உள்ளார் . மசாலாவிற்காக  சேர்த்த குத்துப்பாட்டு ஆட்டம்  படத்தின் தரத்தைக் குறைக்கின்றது      

நிலம் அபகரிப்பு ,ஜெயிலுக்கு செல்லல்,பெயிலில் வெளிய வருதல் ..சிறையிலேயே கொன்று விடுதல்  ,அமைச்சர்களின் கை ஆளாக ரவுடிகள் ,காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் இப்படி நாட்டில் நடப்பில் நாம் தினம் தோறும் காணும் நிகழ்வுகளை படிக்கும் செய்திகளை வைத்து திரைக்கதை அமைத்து வெற்றிப் பெற்றுள்ளார் இயக்குனர் A.S.P.மனோகர் . 

நேர்மையான காவல் அதிகாரிக்கும் ,ஊழல் அரசியல் வாதிக்கும் நடக்கும் போராட்டத்தில் நிஜத்தில்
வெற்றி பெற  முடியாவிட்டாலும், திரைப்படத்திலாவது   நேர்மையான காவல் அதிகாரி வெற்றி பெறுவது போலக் காட்டியது மகிழ்ச்சித் தருகின்றது .எல்லா நேரமும் எல்லாரையும் ஏமாற்ற முடியாது .ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும் .உண்மை வெல்லும்  போன்ற நல்ல செய்திகளை படம் உணர்த்துகின்றது பாராட்டுக்கள்

கருத்துகள்