கொடிய நாரை கவிஞர் இரா .இரவி

கொடிய
 நாரை      கவிஞர் இரா .இரவி

மீனைக்   கொல்லும் நாரையே
மீனின் விழி வடிக்கும்
கண்ணீர் காண்க .

உன்னைப் பார்த்தால்
 இலங்கைக் கொடூரன்
என் நினைவுக்கு வருகிறான்

.உன் அலகில் சிக்கிய மீன்
 இலங்கைக் கொடூரனிடம் சிக்கிய
ஈழத் தமிழர்கள் உயிர் பறித்தான்

உன்னைக் கொல்ல ஒரு விலங்கு
உண்டு உலகில்

 இலங்கைக் கொடூரனைக்
கொல்ல ஒருவன் வருவான்
  

கருத்துகள்