முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப .அவர்களின் பட்டிமன்ற உரையிலிருந்து – (தொகுப்பு - கவிஞர் இரா.இரவி)

முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப .அவர்களின் பட்டிமன்ற உரையிலிருந்து – (தொகுப்பு - கவிஞர் இரா.இரவி)
  
மிகச்சிறந்த சிந்தனையாளரும் ,மிகச்சிறந்த எழுத்தாளரும், மிகச்சிறந்த பேச்சாளருமான செயலர் திரு.வெ.இறையன்பு
இஆப., அவர்கள், மிகச்சிறந்த பட்டிமன்ற நடுவர் என்பதை பறைசாற்றும் விதமாக
இருந்தது. தெளிந்த நீரோடை போல பேசக்கூடியவர்.மிகவும் இயல்பான. யாரையும்
காயப்படுத்தாத. தரமான நல்ல நகைச்சுவைகளைச் சொல்லி பட்டிமன்றத்தை மிகவும்
உயிரோட்டமாக நெறிப்படுத்திச் சென்றார்கள்.
மிகவும் சிரிப்பாக
த் தொடங்கி, விமானம்
மெல்ல மெல்ல மேலே சென்று பறப்பதைப் போல அறிவார்ந்த பல தகவல்களை வழங்கி.
நுட்பமான உரையை தீர்ப்பில் சொல்லி, ஒரு பட்டிமன்றம் எப்படி? இருக்க வேண்டும்
என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக இருந்தது.வருகை தந்த பார்வையாளர்கள் ஒருவர்
கூட எழுந்து செல்லவில்லை. அனைவரையும் தனது அறிவார்ந்த பேச்சாற்றலால் கட்டிப்
போட்டு விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு சிறப்பாகவும,அருமையாகவும்,
பயனுள்ளதாகவும் இருந்தது.

அறிவு விரிவு பெற பெரிதும் தேவை படிப்பா? வாசிப்பா? என்ற தலைப்பில் மிகச்சிறந்த
சிந்தனை பட்டிமன்றம் நடந்தது. படிப்பு என்பது 
பூங்காவைப் போன்றது. வாசிப்பு
என்பது வனத்தைப் போன்றது.

ஒரு மனிதன் ஆசிரியரிடமிருந்து 1/4 பகுதி சகமாணவனிடமிருந்து 1/4 குதி தாமாக1/4 பகுதி
அனுபவத்தால்
1/4 பகுதி கற்றுக் கொள்கிறான். ஆற்றில் மணலைத் தோண்டும் போது நீர்
வருகின்றது. கல்லில் தேவையற்ற பகுதி நீக்கும் போதே சிலை உருவாகின்றது.

ஒரு மாணவன் வகுப்பறையில் ஒரு வகுப்பு மட்டும் இருந்து விட்டு மற்ற வகுப்புகளை
புறக்கணித்துவிட்டு மதிப்பெண் 99 வாங்கி இருந்தான். ஆசிரியர் ஆச்சரியமாக எப்படி
என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன்
வந்தஒரு வகுப்பிற்கு வராமல் இருந்திருந்தால்
100 வாங்கி இருப்பேன். ஒரு வகுப்பிற்கு வந்த குழப்பத்தால் தான் 1 மதிப்பெண்
இழந்தேன் என்றான்.

கோடீஸ்வரன் ஆனால் என்ன செய்வாய்? கட்டுரை எழுது என்றார் ஆசிரியர். மற்ற
மாணவர்கள் எழுதும் போது ஒரு மாணவன் மட்டும் விடைத்தாளை தூக்கி வீசினான் ஏன்?
என்று கேட்ட போது கோடீஸ்வரனாகி விட்ட போது, எதற்காக கட்டுரை எழுத வேண்டும்
என்றான்.

இப்படி தரமான நகைச்சுவைகளை அள்ளி வழங்கி பட்டிமன்றம் தொடங்கியது. தகவல்கள் பல
கூறினார்கள். தன் அண்ணன் பெயர் தூக்கிலிடப் போவோர் பட்டியலில் பார்த்த பின்பு
கணக்கு எழுதி 100 மதிப்பெண் பெற்றார் லெனின். நேரு சிறையில் எழுதிய நூல்களும்
அவர் இந்தியர் அல்லாமல் இருந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்து இருக்கும்.
வாழ்க்கை என்பது வரம். ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.


ஒரு நிறுவனத்தில் டிகிரி படித்த கணினி இயக்கத் தெரிந்த இரண்டு மொழிகள் அறிந்த நபர்
வேலைக்குத் தேவை என அறிவிப்பு செய்தார்கள். ஒரு நாய் வந்ததாம். டிகிரி
சான்றிதழ் வைத்து இருந்ததாம். கணினி இயக்கி காண்பித்ததாம். மொழி இரண்டு
கேட்டதற்கு, வவ் வவ், லொள் லொள் என்றதாம். இந்த நகைச்சுவை சொன்ன போது
அரங்கத்தின் சிரிப்பலை அடங்க சற்று நேரமானது.

சேடப்பட்டி முத்தையா முன்பு சபாநாயகராக இருந்தவர். சேடப்பட்டி ஜெயலட்சுமியை பேச
அழைத்த போது நடுவர், சேடப்பட்டி என்றாலே நிறைய ஸ்பீக்கர் இருப்பார்கள் போலும்
என்றதும் ரசனைக்குரிய நல்ல உரை.

எல்லோருமே அறிவாளிகள் தான். அறிவைப் பயன்படுத்துபவர்கள் சிறப்படைகின்றனர்.
பத்திரப்படுத்துபவர்கள் சிறப்படைவதில்லை.

ஒரு பளிங்கு சிற்பத்தை, மிகவும் தொன்மையானது, பழமையானது கி.மு.நுற்றாண்டு சிலை
என்றனர். பெரிய வல்லுனரைக் கூப்பிட்டு ஆராய்ச்சி செய்து ஆம் என்று உறுதி
அளித்ததும் 10 மில்லியன் டாலருக்கு வாங்கினார்கள். இதைப் பார்த்தும் ஒரு சிற்பி
சொன்னார். இந்த சிலை பழமையானது அல்ல. தற்போது செய்யப்பட்ட போலியான சிலை
என்றார். படிப்பறிவைவிட அனுபவ அறிவு சிறந்தது.

சர்ச்சில், முட்டையை 3 நிமிடம் வேக வைக்க வேண்டும் என்பதை படித்து விட்டு,
வாட்ச்சை முட்டைக்குப் பதிலாகப் போட்டு வேக வைத்தாராம். சர்ச்சிலின் அப்பா தன்
மகனுக்காக ஒரு காலத்தில் கவலைப்பட்டாராம். அப்படிப்பட்டவர் தான் பின்னாளில்
அதிபராக ஒளிர்ந்தார்.

முட்டாள் என்று சீட்டு எழுதி ஒருவர் கொடுத்து அனுப்பினாராம். அதற்கு கேள்வி
கேட்கச் சொன்னால், ஒருவர் தன் பெயரை எழுதி அனுப்பி உள்ளார் என்று
சமாளித்தாராம்.

தமிழுக்கு மிகப்பெரிய பங்களிப்பை நல்கிய திருவள்ளுவரும், கம்பரும் எந்த
பல்கலைக்கழகத்திலும் படிக்கவில்லை. ஷேக்ஸ்பியர் அதிகம் படிக்கவில்லை. ஆனால்
அறியாமை நீக்கினார். வைரத்தை கூழாங்கல் ஆக்குகின்றன பல்கலைக்கழகங்கள் என்று ஒரு
கூற்று உண்டு.

பைபிளுக்கு அடுத்தபடியா ஆங்கிலத்திற்கு அதிக சொற்கள் வழங்கியவர் ஷேக்ஸ்பியர்
24000 வார்த்தைகள் 37 நாடகங்கள் நல்கியவர் எந்த பல்கலைக்கழகத்திலும்
படிக்கவில்லை. கபீர் என்ற ஞானி சொன்னார் கல்லையும், மண்ணையும் வணங்காமல், மலையை
நான் வணங்குவேன் என்றார். கனிவு. அன்பு, மனிதநேயம் இவற்றை பாடத்திட்டங்கள்
உருவாக்குவது இல்லை.

மனிதனை மென்மையாக்கி, மேன்மையாக்கி, நெறிப்படுத்துவது வாசிப்பு. இப்படி
படிப்பிற்கும், வாசிப்பிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி பல்வேறு தகவல்கள்
திருவள்ளுவர் தொடங்கி ஷேக்ஸ்பியர் வரை பல்வேறு அரிய புதிய தகவல்களை வழங்கி.
பட்டிமன்றத்தை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். அணியில் வாதிட்ட அறிஞர்களும்
சிறப்பாக உரையாற்றினார்கள்.



அறிவார்ந்த பட்டிமன்றத்தை வழங்கினார். மதுரை புத்தகத்
திருவிழாவி
ல் மிகச்சிறப்பான பட்டிமன்றத்தை வழங்கி தனிமுத்திரை பதித்தார்கள்.
பட்டிமன்றத்தை செவிமடுத்த அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். செயலர்
திரு.வெ.இறையன்பு இஆப அவர்கள் தொடர்ந்து நடுவராக
ப் பொறுப்பேற்று பட்டிமன்ற நடத்த
வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்கள். மொத்தத்தில் அன்றைக்கு பட்டிமன்றம்
கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர். கேட்க முடியாதவர்கள் வருந்தினார்கள். திருவள்ளுவர்
திருக்குறளில் சொன்னது போல சிறந்த உரையாக இருந்தது.திரு இறையன்பு இ.ஆ.ப அவர்களின்
பன்முக ஆற்றல் கண்டு மதுரை இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை
விதைத்தது. இன்றைக்கு அப்துல்கலாமிற்கு அடுத்தபடியாக முன்மாதிரியாக பலர்
நினைப்பது திரு.இறையன்பு அவர்களைத் தான்





நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

கருத்துகள்