வேண்டாம் கவிஞர் இரா .இரவி
வேண்டாம் தம்பிகளே வேண்டாம்
சேவலையும் சேவலையும்
மோதவிட்டு வேடிக்கை வேண்டாம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
மோதி வீழ்ந்தால் யாருக்கு நன்மை
மனிதாபிமானம் மட்டுமல்ல
விலங்காபிமானமும் வேண்டும்
வாழ வேண்டிய பறவைகளை
வாழ்விழக்க செய்வது முறையோ ?
பெரியவர்களோடு முடியட்டும்
சேவல் சண்டைகள்
இளைய தலைமுறைக்கு
வேண்டாம் வேண்டவே வேண்டாம்
வக்கரக் குணம்
வேண்டாம் தம்பிகளே வேண்டாம்
சேவலையும் சேவலையும்
மோதவிட்டு வேடிக்கை வேண்டாம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
மோதி வீழ்ந்தால் யாருக்கு நன்மை
மனிதாபிமானம் மட்டுமல்ல
விலங்காபிமானமும் வேண்டும்
வாழ வேண்டிய பறவைகளை
வாழ்விழக்க செய்வது முறையோ ?
பெரியவர்களோடு முடியட்டும்
சேவல் சண்டைகள்
இளைய தலைமுறைக்கு
வேண்டாம் வேண்டவே வேண்டாம்
வக்கரக் குணம்
கருத்துகள்
கருத்துரையிடுக