மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ.
நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
மிகுதியான சுவை நாக்கிற்கு லஞ்சம் போன்றது .
உறக்கம் என்பது என்ன ? உழைத்த உடம்பை பழுதுபார்பதற்கு உரிய ஏற்பாடு அது.
எளிமையும் சிக்கனமும் தொடர்பு உள்ளவை.
ஆடம்பரமும் திருட்டும் தொடர்பு உள்ளவை .
உடம்புக்கோ மனதுக்கோ தீங்காக உள்ள எந்த இன்பத்தையும் ஒதுக்க வேண்டும் .
பணவேட்டையைச் சமூகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும் .அதற்க்கு உரிய நெறியில்அரசியலை அமைக்க வேண்டும் .
குடியாட்சி என்ற பெயரால் குழுவாட்சியே இருக்கிறது .
தமிழ் மொழி நல்ல மொழிதான் ,ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா ?
தமிழரிடையே பொதுவாகப் பிரிக்கும் ஆற்றல் வளர்ந்து விட்டிருக்கிறது.
பிணைக்கும் ஆற்றல் வளரவில்லை .
நெருக்கடியில் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியமா ?
அன்பு மனதை ஆதரிக்க வேண்டும் .
ஆணவ மனத்தைக் கைவிட வேண்டும் .
வாழ்க்கையில் பலர் கெடுவதற்குக் காரணம் விதிகளைப் பற்றி எண்ணாமல் ,விதி விலக்கானவர்களைப் பற்றி எண்ணுவதேயாகும்.
இலக்கியக் கல்வி பயன்பட வேண்டுமானால் இலக்கியத்தை முதலில் உணர்ந்தறிய வேண்டும் .பிறகு ஆய்ந்தறிய வேண்டும் .
உள்ளத்து உணர்வின் ஆழமே கலை உலகத்தின் அளவுகோல் .
புலன்களின் இன்பத்தைவிட அறிவின் இன்பம் சிறந்தது .நீடு நிற்பது என்பது அறிஞர் கொள்கை .இலக்கிய இன்பம் அத்தகையதே ஆகும் .
நூல் இருவகை .தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று .
நம் காலத்திற்குத்தான் வந்து உதவுவது மற்ற ஒன்று .
பகை என்பது நன்மை சிறிதும் இல்லாதது .ஆகையால் அது வேடிக்கையானதும் ,விரும்பத்தக்கதும் அன்று .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்
கருத்துரையிடுக