ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                 கவிஞர் இரா .இரவி

மனமெனும் நீதிமன்றத்தில்
மன சாட்சியே
நீதிபதி

ஆசைகளைக் குறைத்தால்
காணமல் போகும்
கவலை

கதை அளப்பவர்களின் 
கட்டுக் கதை
வாஸ்து

ஒன்றில் எழுதியது  மூன்றில்
நான்கில்  எழுதியது எட்டில்
ராசிபலன்கள்

குறை உடலில்
நிறை மனதில்
மாற்றுத்திறனாளிகள்

உயிர்காப்பான்
தோழன்
தலைக்கவசம்     

இன்றைய அமைச்சர்
நாளைய சிறைவாசி
அரசியல்

மேல் பார்த்தால் பொறாமை
கீழ் பார்த்தால் ஆறுதல்
வாழ்வியல்

கொலைகாரனையும்
கொடூரமானவனையும்   
நேசிப்பவள் தாய்

ஆபாசம் ஊறுகாய் அன்று
ஆபாசம் சாப்பாடு இன்று
திரைப்படங்கள்

கூடியது  அன்று
கூட்டுகின்றனர் இன்று
கூட்டம் 

வன்முறை போதிக்கும்
போதி மரங்கள்
திரைப்படங்கள்

ஒரே குட்டையில்
ஊறிய மட்டையில்
சின்னத்திரை பெரியத்திரை

பார்த்தீனியமாகத் திரைப்படங்கள்
குறிஞ்சிமலராக எப்போதாவது
நல்ல படங்கள்  

உயிருள்ளவரை
ஒட்டியே இருக்கும்
பிறந்தமண் நேசம்

தொடக்கம் பீர்
முடிவு பிராந்தி வாந்தி
இளைஞர்கள்

உளவியல்
மனம் செம்மையானால்
வாழ்க்கை செம்மையாகும்

நினைத்தது நடக்கும்
நல்லது   நினைத்தால் 
நல்லது நடக்கும்

கருத்துகள்