துளிப்பாக்கள் இரா .இரவி

துளிப்பாக்கள்   இரா .இரவி

பயமின்றி வழங்கிடுக குருதி
ஆபத்து ஒன்றுமில்லை உறுதி
விபத்தில் காயம் பட்டவர் உடன்
உயிர் பிழைக்க உதவிடும் குருதி
பாதித்தவருக்கு வராது இறுதி

சம்பவமாக இருக்கலாம் பிறப்பு
சரித்திரம் ஆகட்டும் இறப்பு
சாதனை படைக்கட்டும்சிறப்பு
வள்ளுவரின் வாக்கு நெருப்பு
வாழ்வாங்கு வாழ்வதே பொறுப்பு

அன்று பெருகியது ஏற்றுமதி
இன்று பெருகியது இறக்குமதி
பயன்படுத்தவில்லை நல்மதி
நாடாள்வோர் தவறை மிதி
உள்ளூர் தொழிலாளியை மதி

வேண்டாம் பெண்ணே பொன்னகை
போதும் உனக்கு புன்னகை
ஊடக விளம்பரம் பார்த்து
ஊடல் கொள்ளாதே கண்ணே
உன்னைவிட உயர்ததல்ல பொன்னகை


--


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

கருத்துகள்