விமர்சனம் முனைவர் ச.சந்திரா திருவில்லிப்புத்தூர்.

20.10.2011- வியாழன் அன்று ஜெயாத்தொலைக்காட்சி நிறுவனம்  காலைமலர் நிகழ்வில் ஒளிபரப்பிய  முனைவர் நிர்மலாமோகன் அவர்களது பேட்டி
விமர்சனம் முனைவர்  ச.சந்திரா
         திருவில்லிப்புத்தூர்.


உரையிடையிட்டப் பாட்டுடைச் செய்யுள் (சிலப்பதிகாரம்) கேள்விப்பட்டிருக்கிறோம்.உரையிடையிட்டப் பாட்டுடை நேர்காணல்?- கேள்விப்பட்டோம்! ஆம்!20.10.2011- வியாழன் அன்று ஜெயாத்தொலைக்காட்சி நிறுவனம்  காலைமலர் நிகழ்வில் ஒளிபரப்பிய  முனைவர் நிர்மலாமோகன் அவர்களது பேட்டி  உரையும் இசையும் கலந்த இனிய நிகழ்ச்சி எனலாம்.சாகாவரம் பெற்ற சங்கத்தமிழ்ப்பாடல்கள் முதல் இளைஞர்களின் மனதில் சங்கமிக்கும் இன்பத் திரையிசைப்பாடல்கள் வரை சரளமாய்ப்  பாடியபடியே  உரையாடியதில் இவரது இசைத்திறன் புலனாகியது.தனது இருபத்தேழு வருட தமிழாசிரியப்பணி அனுபவத்தை இருபத்தேழு நிமிடங்களில் தொகுத்து வழங்கியது கரும்பைப் பிழிந்து கன்னல்தமிழ்ச் சாறாக்கி, நம்  கரத்தில் தந்ததுபோல் இருந்தது.வகுப்பறையில், பாகற்காயாய்க் கசக்கும் இலக்கணத்தை,திரைபடப்பாடல் ஒப்புமை வழி வெல்லப்பாகாய் உருமாற்றி மாணவர்க்கு அளித்ததில் பேராசிரியது உளவியல்திறன் புலப்படுகிறது.அக்கால ஆண்டாளின் திருப்பாவைப்பாடல் வழி இக்கால இளைஞர்க்கு அறிவுரை ஊட்டியதில், நிர்மலாமோகன் அவர்களின் ஆய்வியல் உற்றுநோக்குத்திறனை உணரமுடிந்தது.மொத்தத்தில் பேரா.நிர்மலாமோகனது நேர்காணல்,' இவரது மாணவராக இருந்து கற்கும் வாய்ப்பை நாம் பெற இயலாமற் போயிற்றே' என்ற ஏக்க உணர்வை தொலைக்காட்சி நேயர்களிடம் ஏற்படுத்தியது எனலாம். 
                    

கருத்துகள்