பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர்
மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வெளியீடு விழா குழுவினர்
தாமு நகர் ,கோவை
விலை 100
ஓவியர் ம .செ. வரைந்த மு வ .ஓவியம் முகப்பு அட்டையில் மிகச் சிறப்பாக உள்ளது .மலரின் உள்ளே முதல் பக்கத்தில் மு .வ .அவர்களின் கையொப்பத்துடன் புன்னகை சிந்தும் மு வ .புகைப்படம் உள்ளது .மலர்க்குழு திருபெ.சிதம்பரநாதன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக
உள்ளது .
இலக்கிய இமயம் மு. வ . பற்றிய கட்டுரைகள் கவிதைகள் 18 அறிஞர்கள் எழுதி உள்ளனர் .மு வ .வின் படைப்புலகம் கட்டுரைகள் ,மு வ .வின் வாழ்க்கைக் குறிப்பு ,மு .வ .வின் படைப்புப் பணி என மலர் அற்புதமாக மலர்ந்து உள்ளது .இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் வசிக்க வேண்டிய நூல் .
இளைய தலைமுறையினர் உணரவேண்டிய மிகச் சிறந்த ஆளுமையாளர் மு .வ .மு .வ .எனும் சான்றோர் என்ற முதல் கட்டுரையில் டாக்டர் அருட்செல்வர் நா .மகாலிங்கம் குறிப்பிடும் முத்தாய்ப்பான வரிகள் .
மு .வ . எவரஸ்ட் சிகரம் போல உயர்ந்ததற்கு பல காரணங்கள் உண்டு .அவருடைய தமிழ்ப்புலமை ,பன்மொழிப்புலமை ,பிற நாடுகள் சுற்றுப்பயணம், படைப்புப்புலமை ,இவற்றையெல்லாம் அவரை உயர்த்துவதற்கு உதவிய துணை காரணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் .
தலைமைக் காரணமாக சொல்ல வேண்டுமானால் அவருடைய தனிமனித ஒழுக்கத்தைத்தான் சொல்ல வேண்டும் .அவர் எழுத்தாளர் ,ஆசிரியர், ஆராய்ச்சியாளர் என்பதைஎல்லாம் விட அவர் எந்த ஒழுக்கத்தைக் கற்பித்தாரோ,அந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர்.
எந்த நிலையிலும் யாவரிடமும் பணிவும் ,பண்பும் உடையவராகவே இருந்தார் மு .வ .என்பது தமிழ்ப் புலவர்களின் உள்ளத்தில் உவகையும் எழுச்சியையும் உண்டாக்கும் மந்திரச் சொல்லாக இருந்தது.
நெஞ்சைவிட்டு அகலா விளக்கு கட்டுரையில் திரு இயகோகா சுப்பிரமணியம் .
தமிழ் உள்ளவரை தமிழர்கள் கொண்டாடும் எழுத்துக்களில் அகல்விளக்கு எனது நெஞ்சை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் விட்டு அகலா விளக்கு என்று எழுதினால் மிகை இல்லை .அதுவே உண்மை .
முதலணி மாணவர்களின் தனி நிலை கட்டுரையில் திரு .ம .ரா.போ .குருசாமி
மு .வ .வீட்டு அறிவிப்புப் பலகையில் இருந்த வாசகம்
கூட்டதிற்கு அழைக்க வேண்டா என்ற வாசகம்
அடுத்த பலகையில் கண்டு பேச திங்கள் ,செவ்வாய் பொதுவாக 5 நிமிடம் போதும் .
இதனைப் படித்தபோது மு .வ .அவர்களின் நேர நிர்வாகம் நம்மால் உணர முடிகின்றது .
திருவள்ளுவர் அல்ல வாழ்க்கை விளக்கம் அல்லது மு .வ .கட்டுரையில் முனைவர் இ .சுந்தர மூர்த்தி
தமிழ் இலக்கிய வரலாற்றில் படைப்பாளுமை மிகுந்த தமிழ்ப் பேராசிரியகத் திகழ்ந்தவர் மு .வ .50 ஆண்டுகளுக்கு முன்
தமிழ் இலக்கிய உலகில் மு .வ என்னும் சொல் தமிழாசிரியர்களுக்கும் ,தமிழ் அன்பர்களுக்கும் தமிழ் மந்திரமாக ஒலித்த சொல் .
அவருடைய நாவல்களை வாசித்தோர் அவர் படைத்த மாந்தர்களின் பெயர்களையும் அவர் தம் ஆளுமையையும் வியந்து போற்றி மகிழ்ந்தனர் .
மு .வ .அவர்களின் அறிய புகைப் படங்களும் மலரில் இடம் பெற்றுள்ளது .எளிமையின் சின்னமாக விளங்கி உள்ளார் மு .வ .சென்னை பல்கலைக் கழகத்தில் இருந்து மதுரைப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக செல்லும் தருவாயில் நண்பர்கள் ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டும் என்று சொன்னதை ஏற்க மறுத்தார் .தேநீர் விருந்தையும் ஏற்க மறுத்தார் .என்ற செய்தி மலரில் படித்த போது வியந்து போனேன் .
மு .வ .வின் மாணவர் முனைவர் மு .க .தங்கவேலன் மரபுக் கவிதை மிகச் சிறப்பாக உள்ளது .
துறவி மு .வ என்ற கட்டுரையில் திரு .பொன் சௌரிராசன் குறிப்பிடும் கருத்து படைப்பாளர்கள் யாவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய நுட்பமான கருத்தாகும் .
எழுதும் போது இந்த உலக மனித உறவுகளை விட அந்த உலக மனிதர்கள் ,நாவலில் வரும் கதை மாந்தர்கள் மிகவும் நெருங்கி விடுகிறார்கள் .அந்த உறவில் இந்த உலகம் தானே விட்டுப்போய் விடுகின்றன .என்றார் மு .வ .
மு .வ .வின் ஓவச் செய்தி என்ற கட்டுரையில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
இருபதாம் நூற்றாண்டு மையத்தில் தமிழ் இலக்கியத்தின் மீதும் தமிழர்கள் மீதும் பேராளுமை செலுத்தியவர் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் மு .வ .ஏறத்தாழ ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தொடர்ந்து கால் நூற்றாண்டுக் காலம் எண்ணம் ,எழுத்து ,,வாழ்வியல் ஆகிய மூன்று தளங்களிலும் பரவி விரவி நின்ற பெயர் மு வ.
மு .வ .தமிழின் இமயம் என்ற கட்டுரையில் முனைவர் கதிர் மகாதேவன்
இமயமலையில் உள்ள எவரஸ்ட் சிகரத்தின் மீது முதன் முதலில் ஏறிய
டென்சிங் போன்றவர் டாக்டர் மு வரதராசனார் .அவர்தம் மாணாக்கர்கள் சிறப்பாக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர் பேராசிரியரிடம் ஐந்து ஆண்டுகள் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் பயின்றவன் .(1954-1959)
குழந்தைக் கவிஞர் செல்வா கணபதி எழுதியுள்ள எளிமை நாயகர் மு .வ .
என்ற கவிதையில் சில வரிகள் .
அமைதியின் இலக்கணம் இவர் ஆனார்
ஆரவாரத்தின் பகையானார்
அமைதியாய் எதையும் படிப்பாரே
அமைதியாய் எதையும் சொல்பவரே
அமைதியாய் யாரையும் எதிர்கொள்வார்
அமைதியாய் நினைத்ததி எழுதித்தான்
அமைதியாய் அன்பை விதைத்தாரே !
மு .வ .நூற்றாண்டு விழா மலர் அட்டை முதல் அட்டை வரை தகவல் களஞ்சியமாக உள்ளது .மு .வ .என்ற இலக்கியக் கடலில் மூழ்கி
முத்து எடுத்து தொகுத்து மலராகப் படைத்தது உள்ளனர் .பாராட்டுக்கள்.வாசகர் மனதில் நல் வித்தாகப் பதியும் .மு .வ .நூற்றாண்டு விழா மலர் மு .வ அவர்களின் மலருன் நினைவுகளை மலர்விக்கும் மலராக மலர்ந்துள்ளது .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக